பெண்ணாடம் (ஆங்கிலம்:Pennadam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தின் திட்டக்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூர் அருகில் தென் திசை நோக்கி 9 கிமீ தொலைவில் உள்ள அரியலூர் மாவட்டம் எல்லையான ஆலத்தியூர் கிராமத்தில் இந்தியாவில் மாபெரும் சிமெண்ட் தொழிற்சாலைகளில் ஒன்றான ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலை உள்ளது. [4]அதன் தொடர்ச்சியான ரயில்வே வழித்தடத்தில் ஈச்சங்காடு ரயில் நிலையம் தொடர்ந்து பெண்ணாடம் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.

பெண்ணாடம்
பெண்ணாடம்
அமைவிடம்: பெண்ணாடம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°24′N 79°14′E / 11.4°N 79.23°E / 11.4; 79.23
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
வட்டம் திட்டக்குடி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

19,494 (2011)

1,541/km2 (3,991/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

12.65 சதுர கிலோமீட்டர்கள் (4.88 sq mi)

54 மீட்டர்கள் (177 அடி)

இணையதளம் www.townpanchayat.in/pennadam
பெண்ணாடம் தொடருந்து நிலையம்

அமைவிடம்

தொகு

விருத்தாசலம்அரியலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெண்ணாடம் பேரூராட்சிக்கு வடகிழக்கே விருத்தாச்சலம் 18 கிமீ; மேற்கில் திட்டக்குடி 13 கிமீ; வடக்கே உளுந்தூர்பேட்டை 41 கிமீ; தெற்கே அரியலூர் 40 கிமீ; திருச்சி 100 கிமீ; மற்றும் தஞ்சாவூர் 85 கிமீ; தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூரின் மாவட்டத் தலைமை நகரமான கடலூர் 80 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

தொகு

12.65 சகிமீ பரப்பும் , 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 164 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி திட்டக்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [5]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,708 வீடுகளும், 19,494 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 78.22% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1005 பெண்கள் வீதம் உள்ளனர். [6]

புவியியல்

தொகு

இவ்வூரின் அமைவிடம் 11°24′N 79°14′E / 11.4°N 79.23°E / 11.4; 79.23 ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 54 மீட்டர் (177 அடி) உயரத்தில் இருக்கின்றது

கோயில்கள்

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. https://www.tradeindia.com/Seller-10341843-The-Ramco-Cements-Limited/
  5. பெண்ணாடம் பேரூராட்சியின் இணையதளம்
  6. Pennadam Population Census 2011
  7. "Pennadam". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில்
  9. "சுடர்கொழுந்தீசர் கோயில்". Archived from the original on 2018-04-02. பார்க்கப்பட்ட நாள் 2018-03-18.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்ணாடம்&oldid=4095447" இலிருந்து மீள்விக்கப்பட்டது