திட்டக்குடி
- பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள திட்டக்குடி பற்றி அறிய, திட்டக்குடி கட்டுரையைப் பார்க்கவும்.
திட்டக்குடி (ஆங்கிலம்:Tittakudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி வட்டத்தின் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். திட்டக்குடி நகரம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
திட்டக்குடி | |||
ஆள்கூறு | 11°25′00″N 79°07′00″E / 11.416667°N 79.116667°E | ||
நாடு | இந்தியா | ||
பகுதி | சோழ நாடு | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | கடலூர் | ||
வட்டம் | திட்டக்குடி | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3] | ||
நகராட்சி ஆணையர் | |||
சட்டமன்றத் தொகுதி | திட்டக்குடி | ||
சட்டமன்ற உறுப்பினர் | |||
மக்கள் தொகை • அடர்த்தி |
22,894 (2011[update]) • 1,552/km2 (4,020/sq mi) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு | 14.75 சதுர கிலோமீட்டர்கள் (5.70 sq mi) | ||
குறியீடுகள்
| |||
இணையதளம் | www.townpanchayat.in/tittakudi |
2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்
தொகு16 அக்டோபர் 2021 அன்று திட்டக்குடி பேரூராட்சியை நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[4][5]
அமைவிடம்
தொகுகடலூர் - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்த திட்டக்குடி நகராட்சி, கடலூரிலிருந்து 92 கிமி தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள தொடருந்து நிலையம், 17 கிமீ தொலைவில் உள்ள பெண்ணாடம் ஆகும். இதன் கிழக்கில் விருத்தாச்சலம் 33 கிமீ தொலைவில் உள்ளது. மங்களூர் ஊராட்சி ஒன்றியம் 24 கிலோ மீட்டர் தெலைவில் உள்ளது.
நகராட்சியின் அமைப்பு
தொகு14.75 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 63 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி அருகில் உள்ள சில கிராமங்களை இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது திட்டக்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [6]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,552 வீடுகளும், 22,894 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 78.3% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 982 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 937 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் 6,302 முறையே மற்றும் 4 ஆகவுள்ளனர். [7]
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ kumbakonam corporaon and 19 muniicipalites
- ↑ தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு
- ↑ திட்டக்குடி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Tittakudi Population Census 2011