கடலூர் மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி

கடலூர் மக்களவை தொகுதி (Cuddalore Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 26வது தொகுதி ஆகும்.

கடலூர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
கடலூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1952-நடப்பு
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்986,030
சட்டமன்றத் தொகுதிகள்151. திட்டக்குடி (தனி)
152. விருத்தாச்சலம்
153. நெய்வேலி
154. பண்ருட்டி
155. கடலூர்
156. குறிஞ்சிப்பாடி

தொகுதி மறுசீரமைப்பு

தொகு

சீரமைப்பிற்கு முன்பு உளுந்தூர்ப்பேட்டை (தனி), நெல்லிக்குப்பம், கடலூர், பண்ருட்டி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகியவை கடலூர் மக்களவைத் தொகுதியில் இருந்தன. நெய்வேலி, திட்டக்குடி (தனி) ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் ஆகும்.

சட்டமன்ற தொகுதிகள்

தொகு

இம்மக்களவைத் தொகுதியில், மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. திட்டக்குடி (தனி)
  2. விருத்தாச்சலம்
  3. நெய்வேலி
  4. பண்ருட்டி
  5. கடலூர்
  6. குறிஞ்சிப்பாடி

மக்களவை உறுப்பினர்கள்

தொகு

இங்கு முதன் முதலில் 1951 ஆம் ஆண்டு தேர்தல் நடந்தது. அன்று முதல் 2019 வரை நடந்துள்ள 17 தேர்தல்களில் 7 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இங்கு அதிமுக 2 முறையும், திமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை இத்தொகுதியில், மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்.

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
1951 கோவிந்தசாமி கச்சிராயர் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி
1957 முத்துக்குமாரசாமி சுயேட்சை
1962 இராமபத்ரன் திராவிட முன்னேற்றக் கழகம்
1967 வி. கே. கவுண்டர் திராவிட முன்னேற்றக் கழகம்
1971 ச. இராதாகிருஷ்ணன் இந்திய தேசிய காங்கிரசு
1977 ஜி. பூவராகவன் இந்திய தேசிய காங்கிரசு
1980 முத்துக்குமரன் இந்திய தேசிய காங்கிரசு (I)
1984 பி. ஆர். எஸ். வெங்கடேசன் இந்திய தேசிய காங்கிரசு
1989 பி. ஆர். எஸ். வெங்கடேசன் இந்திய தேசிய காங்கிரசு
1991 கலியபெருமாள் இந்திய தேசிய காங்கிரசு
1996 பி. ஆர். எஸ். வெங்கடேசன் தமிழ் மாநில காங்கிரசு (மூப்பனார்)
1998 எம். சி. தாமோதரன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1999 ஆதி சங்கர் திராவிட முன்னேற்றக் கழகம்
2004 க. வெங்கடபதி திராவிட முன்னேற்றக் கழகம்
2009 கே. எஸ். அழகிரி இந்திய தேசிய காங்கிரசு
2014 ஆ. அருண்மொழித்தேவன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2019 டி. ஆர். வி. எஸ். ரமேஷ்[1] திராவிட முன்னேற்றக் கழகம்
2024 எம். கே. விஷ்ணு பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு

18வது மக்களவைத் தேர்தல்(2024)

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல் : கடலூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எம். கே. விஷ்ணு பிரசாத் 4,55,053 44.11%
தேமுதிக பி. சிவக்கொழுந்து 2,69,157 26.09%
பாமக தங்கர் பச்சான் 2,05,244 19.9%
நாதக வி. மணிவசகம் 57,424 5.57%
நோட்டா நோட்டா 7,292 0.1%
வெற்றி விளிம்பு -
பதிவான வாக்குகள்
பதிவு செய்த வாக்காளர்கள்
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

17வது மக்களவைத் தேர்தல்(2019)

தொகு

வாக்காளர் புள்ளி விவரம்

தொகு
ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %
10,43,202

முக்கிய வேட்பாளர்கள்

தொகு

இத்தேர்தலில், 10 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 11 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் இரமேஷ், பாமக வேட்பாளரான, கோவிந்தசாமியை 1,43,983 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம்
டி. ஆர். வி. எஸ். ரமேஷ்   திமுக 2,566 5,22,160 50.05%
கோவிந்தசாமி   பாமக 1,549 3,78,177 36.25%
சித்ரா   நாம் தமிழர் கட்சி 127 34,692 3.33%
வி. அண்ணாமலை   மக்கள் நீதி மய்யம் 101 23,713 2.27%
நோட்டா - - 65 8,725 0.84%

16வது மக்களவைத் தேர்தல்

தொகு

முக்கிய வேட்பாளர்கள்

தொகு
வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ஆ. அருண்மொழித்தேவன் அதிமுக 4,81,429
நந்தகோபாலகிருஷ்ணன் திமுக 2,78,304
ஜெயசங்கர் தேமுதிக 1,47,606
எஸ். அழகிரி காங்கிரசு 26,650

வாக்குப்பதிவு

தொகு
2009 வாக்குப்பதிவு சதவீதம்[2] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] வித்தியாசம்
76.06% 78.69% 2.63%

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

தொகு

11 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், காங்கிரசின் எசு. அழகிரி, அதிமுகவின் எம். சி. சம்பத்தை, 23,532 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
எசு. அழகிரி காங்கிரசு 3,20,473
மு. சி. சம்பத் அதிமுக 2,96,941
எம். சி. தாமோதரன் தேமுதிக 93,172
சி. ஆரோக்கியதாசு பகுஜன் சமாஜ் கட்சி 8,269

மேற்கோள்கள்

தொகு
  1. "General elections to the 17th Lok Sabha, 2019 - List of members elected" (PDF). New Delhi: Election Commission of India. 25 May 2019. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
  2. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2012-12-07. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலூர்_மக்களவைத்_தொகுதி&oldid=4081335" இலிருந்து மீள்விக்கப்பட்டது