கே. எஸ். அழகிரி
இந்திய அரசியல்வாதி
கீ. ச. அழகிரி (K. S. Alagiri) என்பவர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் தமிழ்நாடு இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்தார்.[1] 2009ஆம் ஆண்டு நடைபெற்ற கடலூர் மக்களவை தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[2] முன்னதாக, இவர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகச் சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் 1991ஆம் ஆண்டும், தமிழ் மாநில காங்கிரசு வேட்பாளராக 1996ஆம் ஆண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.[3][4]
கீ. ச. அழகிரி | |
---|---|
மாநிலத் தலைவர், தமிழ்நாடு காங்கிரசு | |
பதவியில் பெப்ரவரி 2019 – பெப்ரவரி 2024 | |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2009–2014 | |
தொகுதி | கடலூர் |
சட்டப் பேரவை உறுப்பினர் (தமிழ்நாடு) | |
பதவியில் 1991–2001 | |
தொகுதி | சிதம்பரம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1952 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
முன்னாள் கல்லூரி | அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் |
வேலை | அரசியல்வாதி |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுகடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தினைச் சேர்ந்த இவர், 1952ஆம் ஆண்டு பிறந்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
வகித்தப் பதவிகள்
தொகு- மாநிலத் தலைவர் - தமிழ்நாடு காங்கிரசு (பிப்ரவரி 2019 - பிப்ரவரி 2024)
- இந்திய நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் (2009-2014)
- தமிழகத்தின் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர். (1991-2001)
போட்டியிட்டத் தேர்தல்கள்
தொகுமக்களவைத் தேர்தல்கள்
தொகுஆண்டு | தேர்தல் | கட்சி | தொகுதி | முடிவு | வாக்குகள் பெற்றன | வாக்குப் பங்கு (%) |
---|---|---|---|---|---|---|
2009 | 15 வது மக்களவை | இந்திய தேசிய காங்கிரஸ் | கடலூர் | (வெற்றி) | 3,20,473 | 42.76 |
2014 | 16 வது மக்களவை | இந்திய தேசிய காங்கிரஸ் | கடலூர் | 3வது இடம் | 26,650 | 2.71 |
சட்டமன்றத் தேர்தல்கள்
தொகுஆண்டு | தேர்தல் | கட்சி | சட்டமன்ற தொகுதி | முடிவு | பெற்ற வாக்குகள் | பெற்ற வாக்குகள் (%) |
---|---|---|---|---|---|---|
1991 | தமிழகத்தின் 10 வது சட்டமன்றம் | இந்திய தேசிய காங்கிரஸ் | சிதம்பரம் | வெற்றி | 48,767 | 49.54 |
1996 | தமிழகத்தின் 11 வது சட்டமன்றம் | தமிழ் மாநில காங்கிரஸ் | சிதம்பரம் | வெற்றி | 52066 | 48.02 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கீ. ச. அழகிரி நியமனம்". தினத்தந்தி. 2 பெப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 3 பெப்ரவரி 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Statistical Reports of Lok Sabha Elections" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 17 September 2011.
- ↑ "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
- ↑ 1996 Tamil Nadu Election Results, Election Commission of India