டி. ஆர். வி. எஸ். ரமேஷ்

இந்திய அரசியல்வாதி

டி. ஆர். வி. எஸ். ரமேஷ் (T.R.V.S. Ramesh) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பதினேழாவது மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்.[1]

டி. ஆர். வி. எஸ். ரமேஷ்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2019
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்அ. அருண்மொழித்தேவன்
தொகுதிகடலூர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்உசா
பிள்ளைகள்காயத்திரி
ஸ்ரீநிதி
கண்மணி
வாழிடம்(s)பண்ருட்டி, கடலூர், தமிழ்நாடு, இந்தியா

வாழ்க்கை வரலாறு தொகு

இவர் கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்த்தவர். இவருக்கு உசா என்ற மனைவியும், காயத்திரி, ஸ்ரீநிதி, கண்மணி என 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் பட்டப்படிப்பை படித்துள்ளார். இவர் முந்திரி ஏற்றுமதி மற்றும் இறங்குமதி தொழில் செய்து வருகிறார்.

அரசியல் வாழ்க்கை தொகு

இவர் தி.மு.க.வில் மாவட்ட வர்த்தக அணிச் செயலாளராகவும் பதவி வகிக்கின்றார். 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், கடலூர் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

கொலை வழக்கில் தொகு

திமுக மக்களவை உறுப்பினர் ரமேசுக்குச் சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றிய தொழிலாளி கோவிந்தராசு இறந்த வழக்கில் ரமேஷ் உள்பட ஆறு பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சந்தேக மரணமாக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இப்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

இவர்களில் ஐந்து பேரை கைது செய்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் ரமேசை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.[3] 11 அக்டோபர் 2021 அன்று ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.[4]

இந்த கொலை வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர், . ரமேஷ் உள்ளிட்டோருக்கு எதிராக கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.கடலூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நியாயமாக நடைபெறாது என்பதால் விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, கொலை செய்யப்பட்ட கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மக்களவை உறுப்பினர் ரமேஷ், விசாரணை நீதிமன்றம் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற போதுமான காரணம் உள்ளது எனக்கூறி, வழக்கை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.[5]

சொத்துக்கள் முடக்கம் தொகு

இவர் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் பெற்ற கடனை உரிய தவணையில் திருப்பி செலுத்தாமையால், ரூபாய் 45 கோடி மதிப்புள்ள 3 ஏக்கர் நிலத்தை 26 டிசம்பர் 2022 அன்று வங்கி கையகப்படுத்தியது.[6]

மேற்கோள்கள் தொகு

  1. "கடலூர்: திமுக வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் வெற்றி". தினத்தந்தி (மே 23, 2019)
  2. "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்". பிபிசி தமிழ் (மே 23, 2019)
  3. முந்திரி ஆலை தொழிலாளி மரணம்: கடலூர் திமுக எம்.பி ரமேஷ் மீது கொலை வழக்கு
  4. கடலூர் தி.மு.க., - எம்.பி., ரமேஷ்...சிறையில் அடைப்பு!
  5. திமுக எம்பி.க்கு ரமேசுக்கு எதிரான கொலை வழக்கு | விசாரணையை செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு
  6. கடனை திரும்ப செலுத்தவில்லை - கடலூர் எம்பி-யின் ரூ.45 கோடி சொத்தை வங்கி கையகப்படுத்தியது

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஆர்._வி._எஸ்._ரமேஷ்&oldid=3943700" இலிருந்து மீள்விக்கப்பட்டது