பெண்ணாகடம் பிரளயகாலேசுவரர் கோயில்

பெண்ணாகடம் பிரளயகாலேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற தலமாகும். இது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மெய்கண்டார் அவதரித்ததும் கலிக்கம்ப நாயனார் பேறு பெற்றதும் இத்தலத்தில் எனப்படுகிறது. தேவ கன்னியரும், காமதேனுவும், வெள்ளை யானையும் வழிபட்ட தலமென்பதும் அப்பர் சூல இடபக் குறி பொறிக்குமாறு வேண்டிப் பெற்ற தலமென்பதும் தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.

தேவாரம் பாடல் பெற்ற
பெண்ணாகடம் பிரளயகாலேசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருத்தூங்கானை மாடம்
அமைவிடம்
ஊர்:பெண்ணாடம்
மாவட்டம்:கடலூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பிரளயகாலேஸ்வரர், சுடர்க்கொழுந்துநாதர்
தாயார்:அழகிய காதலி (ஆமோதனாம்பாள், கடந்தை நாயகி)
தல விருட்சம்:செண்பகம்
தீர்த்தம்:கயிலை தீர்த்தம், பார்வதி தீர்த்தம், இந்திர தீர்த்தம், முக்குளம், வெள்ளாறு
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

பெயர்க் காரணம் தொகு

தேவகன்னியரும்(பெண்)+காமதேனுப் பசுவும்(ஆ)+வெள்ளை யானையும்(கடம்)[1] வழிபட்டதால் இத்தலத்திற்கு பெண்+ஆ+கடம் = பெண்ணாகடம் என்று பெயர் வந்தது.

சிறப்பு தொகு

இக்கோயிலின் மூலவர் இருக்கும் கருவறை தூங்கானை மாடம் (வடமொழில் கஜபிருஷடம்) வடிவில் அமைந்துள்ளது. திருநாவுக்கரசர் தமது திருமேனியில் திரிசூலக் குறியும் இடப முத்திரையும் பெற்ற தலமிது. இத்தலத்து மூலவரை முன் வாயில் மூலம் மட்டுமல்லாமல் மற்ற மூன்று புறத்திலிருந்தும் பக்தர்கள் வணங்குவதற்காக பலகணிகள் உள்ளன.

கலிக்கம்ப நாயனார் அவதாரத் தலம்[2]

மேற்கோள்கள் தொகு

  1. https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
  2. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 83,84

இவற்றையும் பார்க்க தொகு