இலகு தொடருந்து

இலகு தொடருந்து அல்லது இலகு இரயில் என்பது சில நகரங்களிலும், நகரை அண்டிய பிரதேசங்களிலும் வழங்கப்படும் பொது போக்குவரத்துச் சேவைகளில் ஒன்றாகவும், சாதாரண தொடர்வண்டிகளை விட ஆற்றலளவும், கொள்ளளவும் குறைந்தவையாகவும், பாரம்பரிய அமிழ் தண்டூர்திகளைவிட ஆற்றலளவும், கொள்ளளவும் அதிகமானவையாகவும் காணப்படும் வாகனங்களாகும். இவை பொதுவாக தனிப்பட்ட பாதைகள்/தண்டவாளங்களைக் கொண்டிருப்பதுடன், பல இடங்களில் ஏனைய போக்கு வரத்துடன் இணைந்து சாதாரண நகர வீதிகளில் இயங்கும்.

கலிபோர்னியாவில் சாண்டியாகோவில் இயங்கும் இரு தொகுப்பு இலகு தொடருந்து
பேர்கன் நகரில் பயன்பாட்டிலுள்ள இலகு தொடருந்து போக்குவரத்துச் சேவை

தற்போது பொதுவாக இவை மின்சாரத்தில் இயக்கப்படுபவையாக இருக்கும். சில மலைகளில் இயங்கும் இலகு தொடருந்துகள் சில இழுவிசையில் இயங்குபவையாகவும் உள்ளன.[1][2][3][4][5]

இலகு தொடருந்து போக்குவரத்து விரைவுப் போக்குவரத்து பண்புகளையும் தினப்பயணியர் தொடருந்து பண்புகளையும் கொண்டிருக்கும். விரைவுப் போக்குவரத்து போன்ற பண்புகளைக் கொண்ட இலகு ரெயில் அமைப்பு இலகு மெட்ரோக்கள் எனப்படுகின்றன. உலகின் பல பகுதிகளிலும் காணப்படும் இலகு தொடருந்து அமைப்புகள் அண்மைக்காலங்களில் மிகவும் பரவலாக விரும்பப்படுகின்றன; கனரக தொடருந்துகளை விட இவை குறைந்த முதலீட்டையும் இயக்கச் செலவினங்களையும் கூடிய நம்பகத்தன்மையையும் கொண்டுள்ளன.

மேற்சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலகு_தொடருந்து&oldid=3579923" இருந்து மீள்விக்கப்பட்டது