கெடிலம் ஆறு

கெடிலம் ஆறு

கெடிலம் ஆறு (Gadilam River) தமிழகத்தின் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் ஊடாகப் பாயும் ஓர் ஆறு. இது ஒப்பீட்டளவில் சிறிய ஆறு ஆகும். திருக்கோவிலூரில் உற்பத்தியாகி, மலட்டாற்றுடன் சேர்ந்து கடலூர் அருகே, தென்பெண்ணை ஆற்றுடன் சேர்ந்து வங்கக்கடலில் ஐக்கியமாகிறது, மழைக்காலங்களில் பெருக்கெடுத்தோடும் இந்த ஆறு இதன் சுற்றுப்புறத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர உதவுகிறது. இது தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்தொகு

  1. http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=795029
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெடிலம்_ஆறு&oldid=2767606" இருந்து மீள்விக்கப்பட்டது