திருவயிந்திரபுரம் அணை

தமிழ்நாட்டில் உள்ள ஒரு அணை

வானமாதேவி அணை என்பது தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்தில் கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டபட்டடுள்ள ஒரு அணையாகும். இது கடலூருக்கு மேற்கே ஏழு கி.மீ. தொலைவில் உள்ள திருவயிந்திரபுரம் என்னும் ஊரை யொட்டிக் கட்டப்பட்டுள்ளது. 1835 - 1836 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணையின் நீளம் 436 அடி ஆகும். 1903 இல் இது நன்கு வலுப்படுத்தப்பட்டது.

இந்த அணைக்குமேல் ஆற்றின் வலப்பக்கத்தில் கால்வாய் பிரிகிறது. இக்கால்வாய் கடலூரின் தென்பகுதியில் பாய்ந்து அவ்வட்டாரத்தில் உள்ள பல ஊர்களுக்குப் பாசன வசதி அளிக்கிறது. பெரிய கால்வாயிலிருந்து சிறிய கால்வாய்கள் பல பிரிகின்றன. அவற்றிலிருந்து சிறுசிறு கால்வாய்கள் மேலும் பல பிரிகின்றன.[1]

குறிப்புகள்தொகு

  1. புலவர் சுந்தர சண்முகனார் (1993). "கெடிலக் கரை நாகரிகம்". நூல் 250. மெய்யப்பன் தமிழாய்வகம். பார்த்த நாள் 11 சூன் 2020.