திருவதிகை அணை

திருவதிகை அணை என்பது தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டம், கடலூர் வட்டத்தில் கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டபட்டடுள்ள ஒரு அணையாகும்.[1] இது கடலூருக்கு மேற்கே 21 கி.மீ (13 கல்) தொலைவில், திருவதிகைக்கு கீழ்பால் 1847 - 1848 ஆம் ஆண்டு காலத்தில் இது கட்டப்பட்டது. அதற்குமுன் இங்கே களிமண் அணையே இருந்தது. அதை அகற்றி இந்த அணை கட்டப்பட்டது. முதலில் 443 அடி நீளமே கட்டப்பட்டிருந்தது. பின்னர் மேலும் நீட்டப்பட்டு 523 அடி நீளம் உடையதாக மாற்றப்பட்டது. அணைக்கு மேற்புறம் ஆற்றின் வடகரையிலிருந்து கால்வாய் பிரிந்து சென்று பல ஊர்களுக்குப் பாசன வசதி செய்கிறது. பெரிய கால்வாயிலிருந்து பல கிளைக் கால்வாய்கள் பிரிந்து அந்தப் பகுதி நெடுகிலும் ஊடுருவிச் செல்கின்றன.[2]

குறிப்புகள்தொகு

  1. தூர்ந்து கிடக்கும் கெடிலம் ஆற்று அணைகள்: மணல் குவாரி அமைக்கபடுமா, தினமணி, 2012 செப்டம்பர், 20
  2. புலவர் சுந்தர சண்முகனார் (1993). "கெடிலக் கரை நாகரிகம்". நூல் 248. மெய்யப்பன் தமிழாய்வகம். பார்த்த நாள் 11 சூன் 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவதிகை_அணை&oldid=2995128" இருந்து மீள்விக்கப்பட்டது