வானமாதேவி அணை

தமிழ்நாட்டில் உள்ள ஒரு அணை

வானமாதேவி அணை[1] அல்லது பல்லாநத்த அணை என்பது தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்தில். கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டபட்டடுள்ள ஒரு அணையாகும். இது கடலூருக்கு மேற்கே 14 கி.மீ. தொலைவில் வானமாதேவி என்னும் ஊருக்குச் சிறிது தொலைவில் கட்டப்பட்டுள்ள அணையாகும். இந்த அணைக்கு அண்மையில் ‘பல்லவராயன் நத்தம்’ என்னும் சிற்றூர் உள்ளதால், அவ்வூரின் பெயரைக்கொண்டு பல்லாநத்த அணை என்றும் மக்கள் அழைக்கின்றனர். இது, 1862 - 1863 ஆம் ஆண்டு காலத்தில் கட்டப்பட்டது. முதலில் கட்டினபோது இதன் நீளம் 421 அடியாகும். பிறகு இது மேலும் விரிவுபடுத்தப்பட்டது. இதன் நீளம் 506 அடியும் 3 அங்குலமுமாகும். அணையின் தென்கரையிலிருந்து கால்வாய் பிரிந்து வாணமா தேவியைச் சார்ந்த பகுதிக்கும் அதன் கீழ்ப்பகுதிக்கும் பாசன வசதியளிக்கிறது. இவ்வணையிலும், கோடைக் காலத்திலும் கண்வாய்களிலிருந்து நீர் வெளியேறிக்கொண்டிருக்கும்.[2]

குறிப்புகள் தொகு

  1. கடலூர், விகாஸ்பீடியா, பார்த்த நாள் 2020 சூலை, 5
  2. புலவர் சுந்தர சண்முகனார் (1993). "கெடிலக் கரை நாகரிகம்". நூல். மெய்யப்பன் தமிழாய்வகம். pp. 249–249. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2020. {{cite web}}: line feed character in |publisher= at position 11 (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானமாதேவி_அணை&oldid=3761262" இலிருந்து மீள்விக்கப்பட்டது