வெள்ளாறு (வடக்கு)

வெள்ளாறு என்பது தமிழ்நாட்டின், சேலம் மாவட்டம், சேர்வராயன் மலைத்தொடரில் உருவாகி சேலம், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களுக்கு ஊடாக ஓடி பரங்கிப்பேட்டை அருகில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கும் ஓர் ஆறாகும். இது ஒரு சிறு ஆறு, இதன் நீளம் 193 கி.மீ மட்டுமே. ஆண்டில் பாதிகாலம் வறண்டே காணப்படும். வெள்ளாற்றின் நீர்பிடிப்புப் பகுதிகள் சுமார் 8086 கி.மீ2 ஆகும். சுவேதா ஆறு, சின்னாறு, ஆணைவாரி ஓடை, மணிமுக்தா ஆறு போன்றவைகள் இதன் துணையாறுகளாகும். இந்த ஆற்றின் குறுக்கே சேத்தியாத்தோப்பு என்னுமிடத்தில் அணைக்கட்டு உள்ளது. [1]

நீர் செல்லும் வழி

தொகு

சேலம் மாவட்டம், சேர்வராயன் மலைத்தொடரில் ஆத்தூர் அருகில் உருவான வசிட்ட ஆறானது, காட்டுக்கோட்டை, மணிவிழுந்தான், தேவியாக்குறிச்சி, பட்டுத்துறை, தலைவாசல்,கொரக்கைவாடி ஆகிய ஊர்களின் வழியாக பயணித்து, கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் ஒன்றான பச்சைமலையில் உருவான சுவேதா ஆறுடன் முதலிலும், பின்னர் கல்லாருடனும் அயன் பேரையூர் அருகே கலக்கின்றது. இவ்விடத்திலிருந்து வெள்ளாறானது துவங்குகின்றது.

இவற்றையும் பார்க்க

தொகு

1.தொழுதூர் அணை 2.விருத்தாசலம் அணை 3.சேத்தியாத்தோப்பு அணை 4.கீழக்குடிக்காடு தடுப்பணை

தொழுதூர் அணை வழியாக வெலிங்டன் ஏரிக்கு நீர் வருகிறது. இவ்வேரி கடலூர் மாவட்டத்தில் உள்ள 25,000 ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி அளிக்கிறது.


மேற்கோள்

தொகு
  1. தேசிய நீர் மேம்பாட்டு முகமை
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளாறு_(வடக்கு)&oldid=3622344" இலிருந்து மீள்விக்கப்பட்டது