கல்லாறு
கல்லாறு பெரம்பலூர் மாவட்டத்தில் ஓடும் ஒரு சிறு ஆறாகும். கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் ஒன்றான பச்சைமலையில் உற்பத்தியாகி, சுவேதா ஆற்றில் கலக்கிறது.[1] பெரிய ஏரிகளில் ஒன்றான வெங்கலம் பகுதியில் உள்ள ஏரியில் கலந்து அங்கிருந்து கிழக்கு திசை நோக்கி பாய்ந்து, கொல்லிமலையில் உற்பத்தியாகிவரும் சுவேதா ஆற்றில் சேர்கிறது. கல்லாற்றின் நீளம் சுமார் 20 கிலோமீட்டர். வருடத்தின் ஆறுமாதங்களுக்கும் அதிகமாக பாயும் இந்த நதியின் மூலம் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. மேலும் 15-க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கு இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது கல்லாறு.
நீர் போக்கு
தொகுஅரசலூர், அன்னமங்கலம் மற்றும் விசுவக்குடி பகுதிகளில் அமைந்துள்ள பச்சைமலைத் தொடரின் அடந்த சரிவுகளில் மழை நீரில் உற்பத்தியாகும் கல்லாறு, பல சிற்றோடைகளையும் தன்னோடு இணைத்துக் கொண்டு தொண்டமாந்துறை, வடகரை-பெரம்பலூர் , வெண்பாவூர், திருவாலந்துறை, வ.களத்தூர் உள்ளிட்ட ஊர்களின் வழியாகப் பாய்ந்து அயன்பேரையூர் அருகே வெள்ளாற்றில் கலக்கிறது.
இந்த நதியில் சிறிதும் பெரிதுமாக கற்கள் நிறைந்து காணப்படுவதால் கல்லாறு என பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. கல்லாறு என்ற பெயரில் தென்கேரளத்திலும் ஆறு ஒன்று ஓடுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மை" (PDF). Archived from the original (PDF) on 2019-03-22. பார்க்கப்பட்ட நாள் 2012-05-06.
- http://www.vellore.tn.nic.in/distprofpart1.htm பரணிடப்பட்டது 2018-01-25 at the வந்தவழி இயந்திரம்