விசுவக்குடி


விசுவக்குடி தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். முக்கிய தொழில் விவசாயம்.

—  கிராமம்  —
ஆள்கூறு
மாவட்டம் பெரம்பலூர்
வட்டம் வேப்பந்தட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கிரேசு இலால்ரிந்திகி பச்சாவு, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி பெரம்பலூர்
சட்டமன்ற உறுப்பினர்

எம். பிரபாகரன் (திமுக)

மக்கள் தொகை 1,330 (2,001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
இணையதளம் www.visvakudi.com

இவ்வூர் மாவட்டத்தின் தலைநகரான பெரம்பலூரிலிருந்து 14கி.மீ தொலைவில் உள்ளது.

இவ்வூரில் முஸ்லிம்கள் அதிகம் வசிகின்றனர். விசுவக்குடி இதற்கு முன் பிஸ்மில்லாகுடி என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மக்கள் தொகை

தொகு

2001ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆண்கள் 704 பேர், பெண்கள் 611 பேர் என மொத்தம் 1330 பேர் உள்ளனர்.

அரசியல்

தொகு

2016 ஆம் ஆண்டு கணக்கின்படி இவ்வூரில் 1048 வாக்காளர்கள் உள்ளனர். இதில் இசுலாமியர்களின் வாக்குகள் 626, ஆதிதிராவிடர்களின் வாக்குகள் 422. மொத்த வாக்காளர்களில் 537 பேர் பெண்கள் உள்ளனர்.

இவ்வூர், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இவ்வூரில் 2015 ஆம் ஆண்டு கட்டப்பட்ட விசுவக்குடி அணை உள்ளது. இது இப்பகுதி மக்களுக்கான சுற்றுலா தளமாகவும் உள்ளது.

உசாத்துணை

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசுவக்குடி&oldid=3777178" இலிருந்து மீள்விக்கப்பட்டது