விசுவக்குடி அணை

விசுவக்குடி அணை விசுவக்குடி தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள விசுவக்குடி அருகில் கல்லாறு ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை. இந்த அணை ரூ.33 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு 2015 இல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது[1].

அமைவிடம்

தொகு

வேப்பந்தட்டை அருகே உள்ள விசுவக்குடியில் பச்சைமலை-செம்மலை இடையே கட்டப்பட்டுள்ள புதிய அணைக்கு பச்சைமலை, செம்மலையில் இருந்து ஏறக்குறைய 5.61 சதுர மைல்கள் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழைநீர் கல்லாற்று நீரோடை வழியாக இந்த அணைக்கு வந்தடைகிறது.

அமைப்பும் கொள்ளளவும்

தொகு

கல்லாறு ஓடையின் குறுக்கே 665 மீட்டர் நீளமும் 10.3 மீட்டர் ஆழமும் கொண்டுள்ளது. இந்நீர்த்தேக்கத்தில் 41 மில்லியன் கனஅடி நீரை தேக்கிவைத்து 30.67 மில்லியன் கனஅடி நீரை பாசனத்திற்கும், 10 மில்லியன் கனஅடி நீரை குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தமுடியும். இந்த அணையில் 2 நீர் வெளியேற்று வாய்க்கால்கள் உள்ளன. நடுவில் உபரிநீர் வெளியேற்று வாய்க்காலும் உள்ளது.[2].

பயன்பாடு

தொகு

2,500 ஏக்கர் பயிர்சாகுபடிக்குரிய நீர்த்தேவையை இவ்வணை பூர்த்தி செய்யும்

நீர் செல்லும் வழி

தொகு

விசுவக்குடி அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரானது முதலில் லாடபுரம் ஏரிக்கு சென்று அது நிரம்பியபின் வெங்கலம், வெண்பாவூர், வடகரை, பாண்டகாபாடி, மறவநத்தம், என் புதூர், விகளத்தூர் என கல்லாற்றின் வழியாக பய்ணித்து வெள்ளாற்றில் கலக்கின்றது.

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசுவக்குடி_அணை&oldid=3850707" இலிருந்து மீள்விக்கப்பட்டது