வெள்ளாறு (தெற்கு)
வெள்ளாறு (South Vellar) புதுக்கோட்டை மாவட்டம், திருச்சி மாவட்டம் போன்ற பகுதிகளில் ஓடும் சிற்றாறாகும். திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, துவரங்குறிச்சியிலிருந்து 20 கி.மீ வடமேற்கேவுள்ள குமரிக்கட்டை வனப்பகுதிகளில் உற்பத்தியாகிறது. வேம்பனூர் நீர்த்தேக்கத்திலிருந்து வரும் உபரிநீரையும் சேர்த்துக் கொண்டு 137 கிமீ தூரம் ஓடி மணமேல்குடி தாலுகா, மும்பாலை கிராமத்தின் அருகே வங்கக்கடலில் சேர்கிறது.[1][2] நெருங்கிக்குடியாறு மற்றும் குண்டாறு இதன் துணையாறுகளாகும். புதுக்கோட்டை திருமயம் வட்டத்திலிருந்து 30 கி.மீ ஓடி கும்மன்குடி அருகே நெருங்கிக்குடியாறு வெள்ளாற்றுடன் சேர்கிறது. புதுக்கோட்டை, கவிநாடு பெரிய நீர்த்தேக்கத்திலிருந்து 7.50 கி.மீ ஓடி கடயக்குடியில் குண்டாறு இவ்வாற்றுடன் சேர்கிறது. தமிழக நதிநீர் இணைப்புத் திட்டத்தின்படி காவிரியுடன் இந்த ஆற்றை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.