புதுக்கோட்டை தொடருந்து நிலையம்
புதுக்கோட்டை தொடருந்து நிலையம் (Pudukkottai railway station, நிலையக் குறியீடு:PDKT) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், புதுக்கோட்டை நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வே மண்டலத்தின், மதுரை கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த நிலையம் திருச்சிராப்பள்ளி - காரைக்குடி வழித்தடத்தில் உள்ள ஒரு முக்கிய தொடருந்து நிலையமாகும்.[1] இந்த நிலையம் தமிழகத்தின், தென்மாவட்டங்களுக்கு மாற்று இரயில் பாதையாகவும் செயல்படுகிறது.[2]
புதுக்கோட்டை | |
---|---|
தொடருந்து நிலையம் | |
தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | நயினார் காலனி, புதுக்கோட்டை, தமிழ்நாடு- 622 003. இந்தியா |
ஆள்கூறுகள் | 10°22′19″N 78°48′07″E / 10.372°N 78.802°E |
ஏற்றம் | 90 மீட்டர்கள் (300 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | தென்னக இரயில்வே |
தடங்கள் | திருச்சிராப்பள்ளி–மானாமதுரை |
நடைமேடை | 3 |
இருப்புப் பாதைகள் | 4 |
இணைப்புக்கள் | பேருந்து, வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா நிலையம் |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் |
தரிப்பிடம் | உண்டு |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது |
மாற்றுத்திறனாளி அணுகல் | |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயங்குகிறது |
நிலையக் குறியீடு | PDKT |
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே |
கோட்டம்(கள்) | மதுரை |
பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 17 ஏப்ரல் 1929 |
மறுநிர்மாணம் | 2007 |
மின்சாரமயம் | பணிகள் நடைபெற்று வருகின்றன |
வரலாறு
தொகு1886 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், புதுக்கோட்டையை தொடருந்து மூலம் திருச்சி மற்றும் பிற இடங்களுடன் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் அப்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகள் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தபோது, புதுக்கோட்டை சமஸ்தானம் ஒரு மன்னரால் ஆளப்பட்டதால், இவர்களுக்கிடையில் முன்மொழியப்பட்ட ரயில் பாதையின் செலவுத் தொகை பங்கீடு குறித்து நீடித்த பேச்சுவார்த்தைகள் நடந்தன. பின்னர், ஒரு வழியாக 35 ஆண்டுகளுக்கு பிறகு 1921ஆம் ஆண்டில், திருச்சிராப்பள்ளி- புதுக்கோட்டை- காரைக்குடி பாதையின் போக்குவரத்துக்கான செலவு கணக்கெடுப்பானது, தென்னிந்திய இரயில்வேயின் (எஸ்.ஐ.ஆர்) ராவ் சாஹிப் எஸ்.கிருஷ்ணமாச்சாரியால் எடுக்கப்பட்டது. இதில் இரயில் பாதை அமைப்பதற்கான செலவு மைலுக்கு, ரூ. 1.32 லட்சம் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. ஒரு குறுகிய கால கட்டுமானத்திற்குப் பிறகு, திருச்சிராப்பள்ளி - புதுக்கோட்டை வழித்தடமானது ஏப்ரல் 17, 1929 இல் திறக்கப்பட்டது மற்றும் சூலை 1, 1930 அன்று புதுக்கோட்டை - மானாமதுரை வழித்தடமானது திறக்கப்பட்டது.
அமைவிடம்
தொகுஇந்த தொடருந்து நிலையம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2.1 கிலோமீட்டர் (1.3 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இது நகரத்திலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளதால் இதை எளிதில் அணுக முடியாது. இதை ஒரு வாடகையுந்து அல்லது ஆட்டோ ரிக்சா மூலம் அணுகலாம். பாதை மாற்றத்திற்கு முன், நிலையத்தில் 3 தடங்கள் மட்டுமே இருந்தன. இப்போது சரக்கு தொடருந்துகளை கையாள, கூடுதல் நான்காவது பாதை அமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தொடருந்து நிலையத்தை விரிவுபடுத்துவதற்கு கணிசமான அளவு இடமும் உள்ளது.
சேவைகள்
தொகுதிருச்சிராப்பள்ளியில் இருந்து காரைக்குடி, மானாமதுரை செல்லும் அனைத்து தொடருந்துகளும், சென்னை எழும்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளியில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் சில தொடருந்துகளும் மற்றும் செங்கோட்டைக்கு செல்லும் ஒரு தொடருந்தும் நிலையம் வழியாக செல்கின்றன. இந்த நிலையத்தில் அனைத்து தொடருந்துகளும், குறைந்தபட்சம் 1-2 நிமிடங்கள் நிறுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Madurai Division System Map" (PDF). Southern Railway. பார்க்கப்பட்ட நாள் 14 May 2017.
- ↑ "No bonanza for T.N. in Railway Budget". The Hindu. 2012-03-15. பார்க்கப்பட்ட நாள் 2015-03-03.
வெளியிணைப்புகள்
தொகு- புதுக்கோட்டை தொடருந்து நிலையம் Indiarailinfo.