அரியலூர் தொடருந்து நிலையம்
அரியலூர் தொடருந்து நிலையம் (Ariyalur railway station, நிலையக் குறியீடு:ALU) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள, அரியலூர் நகரில் உள்ள ஒரு முக்கிய தொடருந்து நிலையமாகும். விழுப்புரம் மற்றும் திருச்சிராப்பள்ளிக்கு இடையே அமைந்துள்ள இந்நிலையம், நிர்வாக காரணங்களுக்காக திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம், தென்னக இரயில்வேயின் கீழ் செயல்படுகிறது.
அரியலூர் | |
---|---|
தொடருந்து நிலையம் | |
![]() அரியலூர் தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | பெரம்பலூர் சாலை, அரியலூர், அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு[1] இந்தியா |
ஆள்கூறுகள் | 11°08′57″N 79°04′07″E / 11.1491°N 79.0686°E |
ஏற்றம் | 70 மீட்டர்கள் (230 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | தென்னக இரயில்வே |
தடங்கள் | கார்டு லைன் |
நடைமேடை | 3 |
இணைப்புக்கள் | ஆட்டோ ரிக்சா, வாடகையுந்து |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் |
தரிப்பிடம் | உண்டு |
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | ALU |
இந்திய இரயில்வே வலயம் | தென்னக இரயில்வே |
இரயில்வே கோட்டம் | திருச்சிராப்பள்ளி |
பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே |
அமைவிடம் | |
இருப்பிடம் மற்றும் தளவமைப்பு தொகு
அரியலூர் தொடருந்து நிலையம் பெரம்பலூரின் முக்கிய சாலையில் அமைந்துள்ளது. அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்கான முக்கிய இரயில்வே நிலையமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு ஒரு முக்கியமான இரயில் நிலையமாக செயல்படுகிறது.
இந்த நிலையம் விழுப்புரம் - திருச்சிராப்பள்ளி கார்டு லைன் வழித்தடத்தில் அமைந்துள்ளது.
வசதிகள் தொகு
இந்த நிலையம் உயர்நிலைக் காத்திருப்பு அறைகள், ஏ.டி.எம் மற்றும் சக்கர நாற்காலிகள் போன்ற வசதிகளும், ஓய்வு அறைகள் போன்ற வசதியும் உண்டு. இங்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம் உள்ளது. இது நிலையத்திலிருந்து உள்ளூர் பேருந்து சேவைகளை வழங்குகிறது.
இருப்பினும் இந்த இரயில் நிலையமானது, பயணிகளுக்கு படிப்படியாக கடுமையான உட்கட்டமைப்பு பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறது. இரயில் நிலையத்தில் இருந்து தஞ்சாவூருக்கு நேரடி பஸ் சேவைகளைத் திரும்பப் பெறுவதுடன், மற்ற வழிகளிலும் போதுமான சேவைகளை இல்லாத நிலையிலும் இந்த நிலையத்திற்கு பயணிகள் பயணிப்பதில் பெரும் பாதிப்பைக் காணலாம்.
இந்நிலையத்திற்கு காலை 7.40 மணிக்கு வந்தடையும், சென்னை நோக்கி செல்லும் பல்லவன் விரைவுத் தொடருந்துக்காக தஞ்சாவூரிலிருந்து நேரடியாக இந்த தொடருந்து நிலையத்திற்கு ஒரு அரசு பேருந்து இயக்கப்படுகிறது.
மேற்கோள்கள் தொகு
- ↑ "ALU/Ariyalur railway station". Indiarailinfo. http://indiarailinfo.com/departures/ariyalur-alu/1504. பார்த்த நாள்: 20 July 2014.