அரூர் (ஆங்கிலம்:Harur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டத்தில் அரூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அரூர்
அரியூர்
அரூர்
அரியூர்
இருப்பிடம்: அரூர்
அரியூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°04′N 78°30′E / 12.07°N 78.5°E / 12.07; 78.5
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தருமபுரி
வட்டம் அரூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, இ. ஆ. ப
சட்டமன்றத் தொகுதி அரூர்
சட்டமன்ற உறுப்பினர்

வே. சம்பத்குமார் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

25,469 (2011)

1,727/km2 (4,473/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

14.75 சதுர கிலோமீட்டர்கள் (5.70 sq mi)

350 மீட்டர்கள் (1,150 அடி)

இணையதளம் www.townpanchayat.in/harur

இந்த ஊரை, கிராம மக்கள் அரியூர் எனக் குறிப்பிடுகின்றனர். கல்வெட்டுகளிலும், இவ்வூர் இப்பெயரிலேயே காணப்படுகின்றது. எனவே 'அரியூர்' என்பதே இந்த ஊரின் பழைய பெயராகும். 'அரூர்' என்பது அதன் திரிபு.[3][4]

அமைவிடம் தொகு

அரூர் பேரூராட்சியிலிருந்து, தருமபுரி 40 கி.மீ. (வழி: மொரப்பூர், ஒடசல்பட்டி). மாரண்டஹள்ளி 66 கி.மீ. (வழி: மொரப்பூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், வெள்ளிசந்தை) தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள தொடருந்து நிலையம் 13 கி.மீ. தொலைவில் உள்ள மொரப்பூர் ஆகும்.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

14.75 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 113 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி அரூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தருமபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

புவியியல் தொகு

இவ்வூரின் அமைவிடம் 12°04′N 78°30′E / 12.07°N 78.5°E / 12.07; 78.5 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 350 மீட்டர் (1148 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு தொகு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 6,607 வீடுகளில் 25,469 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 12,543 ஆண்கள், 12,926 பெண்கள் ஆவார்கள். அரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 82%; பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.[7]

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 2 - கல்வெட்டு தொகுதி எண் - 1974/57
  4. தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 2 - கல்வெட்டு தொகுதி எண் - 1974/78
  5. அரூர் பேரூராட்சியின் இணையதளம்
  6. "Harur". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. Harur Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=அரூர்&oldid=3927224" இலிருந்து மீள்விக்கப்பட்டது