மாரண்டஅள்ளி

தமிழ்நாட்டில் உள்ள பேரூராட்சி
(மாரண்டஹள்ளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாரண்டஹள்ளி (ஆங்கிலம்:Marandahalli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

மாரண்டஹள்ளி
மாரண்டஹள்ளி
அமைவிடம்: மாரண்டஹள்ளி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 12°24′N 78°00′E / 12.4°N 78.0°E / 12.4; 78.0
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தருமபுரி
வட்டம் பாலக்கோடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

12,451 (2011)

7,782/km2 (20,155/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 1.6 சதுர கிலோமீட்டர்கள் (0.62 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/marandahalli

சுற்றுலா

தொகு

மாரண்டஅள்ளி அருகில் உள்ள சுற்றுலா தலங்களாக பெட்டமுகிளாலம் மலைப்பகுதி உள்ளது இது மாரண்டஹள்ளியின் ஊட்டி அல்லது மாரண்டஹள்ளியின் ஏற்காடு என அழைக்கப்படுகிறது. மற்றும் பஞ்சப்பள்ளி அணை, சாமி ஏரி ஐய்யூர்வன சுற்றுச்சூழல் மையம் காவிரி வடக்கு காட்டுயிர் காப்பகம் கேசரக்குலிஅணை சென்றசாமி கோவில் போன்றன மாரண்டஅள்ளி அருகில் உள்ள சுற்றுலா தலங்கள் ஆகும். மேலும் பெருங்காடு அய்யனார் கோட்டை சுல்தான் கால துர்கம்மலை கோட்ட குமாரசெட்டி ஏரி ஆகியவை மாரண்டஅள்ளி சுற்றியுள்ள சுற்றுலா தளங்கள் ஆகும்.

கோவில்கள்

தொகு

மாரண்டஅள்ளி நகரை ஒட்டி சிறப்பு வாய்ந்த பல்வேறு கோவில்கள் உள்ளன மாரண்டஹள்ளி வெள்ளிச்சந்தை சாலையில் உள்ள அங்காளம்மன் கோவில் மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். மல்லாபுரம் சாலையிலுள்ள பட்டாளம்மன் கோவில் பஞ்சப்பள்ளி சாலையில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவில் போன்ற மாரண்டஅள்ளி கோவில்கள்நகருக்குள் இருக்கும் கோவில்கள் ஆகும். மல்லாபுரம் அருகே பாவளிமலையில் அமைந்துள்ள சென்றாசாமி கோவில் மாரண்டஅள்ளி நகரை ஒட்டியுள்ள முக்கிய மலைக் கோவிலாகும்.

அமைவிடம்

தொகு

இப்பேரூராட்சிக்கு தெற்கில் தருமபுரி 45 கிமீ; வடக்கில் ஒசூர் 65 கிமீ; கிழக்கில் கிருஷ்ணகிரி 45 கிமீ; மேற்கில் பெங்களூர் 90 தொலைவில் உள்ளது. தென்மேற்கில் அய்யனார் கோட்டை 10 கி.மீ, பெட்டமுகிளாலம் 15 கி.மீ உள்ளது. மாரண்டஅள்ளி நகரம் மாநில தலைநகரான சென்னையில் இருந்து 304 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

தொகு

1.60 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 41 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரவல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,179 வீடுகளும், 12,451 மக்கள்தொகையும் கொண்டது.[4]

போக்குவரத்து வசதிகள்

தொகு

பேருந்து வசதிகள்

தொகு

இந்த நகரத்தின் பிரதான சாலை வழியாக இணைக்கும் ஊர்கள் 1,கிழக்கே கிருஷ்ணகிரி(வழி:வெள்ளிசந்தை, காவேரிப்பட்டிணம்)

அரூர் (வழி: வெள்ளிசந்தை,காரிமங்களம்,கம்பைநல்லூர்,மொரப்பூர்)

2,மேற்கே தேன்கனிக்கோட்டை (வழி:பஞ்சபள்ளி டேம், ரத்னகிரி)

3,வடக்கே ஒசூர் (வழி: காடுசெட்டிப்பட்டி, ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, அளேசீபம்)

4,தெற்கே சேலம் (வழி: அ.மல்லாபுரம், பாலக்கோடு, தர்மபுரி, தொப்பூர்,ஓமலூர்)

5.தென்மேற்கே பேருந்து வசதி இல்லாத முக்கிய சாலை பெட்டமுகிளாலம் (வழி: சாஸ்திரமுட்லு, அண்ணாநகர், தோழன்கிணறு, காலிகட்டம்).

6.அய்யனார் கோட்டை (வழி:சாஸ்திரமுட்லு, பெருங்காடு).

தொடருந்து வசதிகள்

தொகு

இந்த நகரத்தின் தொடர்வண்டி நிலையம் மாரண்டஹள்ளி ஆகும். இந்த தொடர்வண்டி நிலையத்தில் இருந்து பெங்களூரு மற்றும் காரைக்கால் வரை செல்லலாம்.

புவியியல்

தொகு

இவ்வூரின் அமைவிடம் 12°24′N 78°00′E / 12.4°N 78.0°E / 12.4; 78.0 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 581 மீட்டர் (1906 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மாரண்டஹள்ளி சிறப்புகள்

தொகு

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி தென்னந்தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு அதிக அளவில் விவசாயம் நடைபெறுகிறது. இங்கு விளைவிக்கப்படும் பலாப்பழம் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மிகுந்த வரவேற்பை பெற்றதாகும். தர்மபுரி மாவட்டத்தில் ஓரளவிற்கு விவசாயப் நிறைந்த பகுதி மாரண்டஅள்ளி பகுதியாகும். இப்பகுதியை சுற்றி செங்கல் தொழில் அதிக அளவில் உள்ளது அய்யனார் கோட்டை பெருங்காடு கெண்டேனஅள்ளி போன்ற பகுதிகளில் அதிக அளவில் செங்கல் உற்பத்தி நடைபெறுகிறது. இங்கிருந்து சென்னை கோயம்புத்தூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருச்சி போன்ற நகரங்களுக்கு செங்கல் ஏற்றுமதி அதிக அளவில் நடைபெறுகிறது

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. மாரண்டஹள்ளி பேரூராட்சியின் இணையதளம்
  4. Marandahalli Population Census 2011
  5. "Marandahalli". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரண்டஅள்ளி&oldid=3692116" இலிருந்து மீள்விக்கப்பட்டது