காவிரி வடக்கு காட்டுயிர் காப்பகம்
காவிரி வடக்கு காட்டுயிர் காப்பகம் (Cauvery North Wildlife Sanctuary) என்பதுஇந்தியாவின் தமிழ்நாட்டின் தருமபுரி மற்றும் கிருட்டிணகிரி மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாகும்.[1][2] இந்த சரணாலயம் தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் வடக்கே அமைந்திருப்பதாலும், ஆற்றின் தெற்கே கர்நாடக மாநிலத்தின் காவிரி வனவிலங்கு சரணாலயத்துடன் இணைவதாலும் காவிரி வடக்கு காட்டுயிர் காப்பகம் என்று அழைக்கப்படுகிறது. இச்சரணாலயம் 2014ஆம் ஆண்டில் மார்ச் 12 அன்று, வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-ன் பிரிவு 26-ஏ இன் உட்பிரிவு (1)இன் உட்பிரிவு (1)இன் உட்பிரிவு (பி)-ன் கீழ் தமிழ்நாடு அரசு, காவிரி வடக்கு வனவிலங்கு சரணாலயமாக அறிவித்தது.[3][4]
இச்சரணாலயம் மேலகிரி மலைத் தொடர்களின் கீழ் வருகிறது. இது கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் இணைவிடத்தில் குறிப்பிடத்தக்க கானுயிரின வளாகங்கள். இது மாதேசுவரன் மலை, பிஆர் மலைகள், சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் ஆகியவற்றுடன் முக்கிய இணைப்பை உருவாக்குகிறது. இந்த சரணாலயம் வடமேற்கு தமிழ்நாட்டின் தருமபுரி வன கோட்டத்தின் பாலக்கோடு வட்டம் மற்றும் ஓசூர் வன கோட்டத்தின் தேன்கனிக்கோட்டை வட்டம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Oppili, P. (3 May 2013). "Four new wildlife sanctuaries for State". பார்க்கப்பட்ட நாள் 19 February 2018.
- ↑ Anandan, Sanjeevi (20 May 2017). "Tamil Nadu: GPS used for first time in jumbo count". Deccan Chronicle. பார்க்கப்பட்ட நாள் 19 February 2018.
- ↑ Tamil Nadu Government Gazette published the notice on 12 March 2014 for the formation of Cauvery North Wild Life Sanctuary in Hosur and Dharmapuri Forest Divisions under Wild Life Protection Act under Gazette issue number : 10 of Part II—Section 2 ENVIRONMENT AND FOREST DEPARTMENT - Wild Life Protection Act. Retrieved on 27 May 2017.
- ↑ தேசிய வனவிலங்கு தரவு மையம் (10 ஜூலை 2015). "பாதுகாக்கப்பட்ட பகுதி அரசிதழ் அறிவிப்பு தரவுத்தளம் (தமிழ்நாடு)" . இந்திய வனவிலங்கு நிறுவனம். 2007-03-26 இல் பெறப்பட்டது.
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம். 27 மே 2017 அன்று பெறப்பட்டது.
- கென்னத் ஆண்டர்சன் நேச்சர் சொசைட்டி மேலகிரி பகுதியில் வனவிலங்கு மாற்றத்தை பாதுகாக்கிறது மற்றும் காவிரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்திற்கான முகாம். 27 மே 2017 அன்று பெறப்பட்டது.
- இந்தியாவின் வனவிலங்கு சரணாலயங்களின் பரணிடப்பட்டது 2022-03-03 at the வந்தவழி இயந்திரம் பட்டியலில் விஜய் சௌத்ரி அவர்கள் சரணாலயத்தை S.No 406 இன் கீழ் பட்டியலிட்டுள்ளார். 27 மே 2017 அன்று பெறப்பட்டது.