தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை (Denkanikottai), இந்தியாவின் தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, தேன்கனிக்கோட்டை வட்ட நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். தேன்கனிக்கோட்டை நகரம் சோழர்கள், போசளர்கள் , முகலாயர்கள் மற்றும் பிரித்தானியர்கள் என பல்வேறு பேரரசுகள் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக இருந்துள்ளது. தேன்கனிக்கோட்டை சோழர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக இருந்துள்ளது என்பதற்கு 13-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால கல்வெட்டு கிடைத்துள்ளது. போசளர்கள் கால கட்டிடக்கலைக்கு வேட்டையாடிய பிரான் (பேட்டராய சுவாமி கோயில்) திருக்கோயில் சிறந்த சான்றாகும். தேன்கனிக்கோட்டை நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
தேன்கனிக்கோட்டை | |||||||
ஆள்கூறு | 12°31′49″N 77°47′24″E / 12.5301533°N 77.7900718°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | கிருஷ்ணகிரி | ||||||
வட்டம் | தேன்கனிக்கோட்டை | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | |||||||
மக்கள் தொகை | 24,252 (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/denkanikottai |
அமைவிடம்
தொகுதேன்கனிகோட்டை பேரூராட்சிக்கு கிழக்கில் கிருஷ்ணகிரி 65 கிமீ; வடக்கில் ஒசூர் 24 கிமீ; தெற்கில் தருமபுரி 70 கிமீ தொலைவிலும் மாரண்டஹள்ளி 34கிமீ தூரத்திலும் உள்ளது. இதனருகில் அமைந்த தொடருந்து நிலையம் 12 கிமீ தொலைவில் உள்ள கெலமங்கலத்தில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகுஇந்த ஊர் பழைய பேட்டை, புதுப் பேட்டை என்ற இருபகுதிகளாக உள்ளது. மலைச்சரிவுகளில் மக்கள் வாழும் பகுதி புதுப்பேட்டை எனப்படுகிறது. பெருமாள் கோயில் உள்ள பகுதி பழைய பேட்டை எனப்படுகிறது.[3]
தேன்கனிக்கோட்டை பேரூராட்சி
13.26 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 84 தெருக்களையும் கொண்டது. இது தளி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,393 வீடுகளும், 24,252 மக்கள்தொகையும் கொண்டது.[5]
பேட்ராய சாமி கோயில்
தொகுபுகழ்பெற்ற வேட்டையாடிய பிரான் கோயில் அல்லது பேட்ராய சாமி கோயில் (பேட்டே என்ற கன்னட சொல்லுக்கு வேட்டை என்று பொருள்) தேன்கனிக் கோட்டையில் உள்ளது. இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது.
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். pp. 144–145.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ தேன்கனிகோட்டை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ DenkanikottaiPopulation Census 2011
5.