தேன்கனிக்கோட்டை வட்டம்

தேன்கனிகோட்டை வட்டம் , தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக தேன்கனிக்கோட்டை நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 94 வருவாய் கிராமங்கள் உள்ளன.[1]

இவ்வட்டத்தில் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 347,474 ஆகும். அதில் 178,989 ஆண்களும், 168,485 பெண்களும் உள்ளனர். 79,272 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 89.2% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 61.87% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 941 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 40429 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 933 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 50,058 மற்றும் 11,591 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 91.38%, இசுலாமியர்கள் 5.41%, கிறித்தவர்கள் 2.61% மற்றும் பிறர் 0.60% ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்கனிக்கோட்டை_வட்டம்&oldid=3460692" இலிருந்து மீள்விக்கப்பட்டது