வேட்டையாடிய பிரான் கோயில்

வேட்டையாடிய பிரான் கோயில் அல்லது பேட்ராய சாமி கோயில் (பேட்டே என்ற கன்னட சொல்லுக்கு வேட்டை என்று பொருள்) என்பது கிருட்டிணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ள கோயிலாகும். இக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது.

வேட்டையாடிய பிரான் கோயில்
பெயர்
வேறு பெயர்(கள்):பேட்ராய சாமி கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவு:தேன்கனிக்கோட்டை
ஆள்கூறுகள்:12°30′58″N 77°47′55″E / 12.51611°N 77.79861°E / 12.51611; 77.79861ஆள்கூறுகள்: 12°30′58″N 77°47′55″E / 12.51611°N 77.79861°E / 12.51611; 77.79861
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:போசளக் கட்டிடக்கலை

தலவரலாறுதொகு

கண்வ முனிவர் தவம் செய்தபோது தேவகண்டன் என்ற அரக்கன் புலியுருவில் வந்து அவர் தவத்துக்கு இடையூறு செய்தான். அப்போது கண்வ முனிவர் வேட்டையாடிய பிரானை வேண்டினார். இறைவன் தன்னுடைய 'டேங்கினி' என்ற கட்கத்தை எறிந்து அவனைக் கொன்றார். என தலவரலாறு கூறுகிறது.

மங்கலாசாசனம்தொகு

இத்திருப்பதிக்கு ஏற்றம் செய்து உபந்யாச ரத்னேயாதி அநேகபிருதாந்திகரான வித்வான் பூவராஹாச்சார்ய சுவாமிகள் மங்களாசாசனம் செய்திள்ளார்.[1]

கோயிலின் அமைப்புதொகு

வேட்டையாடிய பிரான் ஸ்ரீதேவி, பூதேவி உடன் காணப்படுகிறார். இராமர், லட்சுமணன், சீதை, அனுமான் ஆகியோருக்கும் தனிச்சந்நிதி அமைந்துள்ளது. ஆனுமாருக்கு தனிச் சன்னதியும் உள்ளது.

வேணுகோபாலன், ருக்மிணி, சத்யபாமா உடன்சந்நிதியில் காணப்படுகின்றார். ஆழ்வார்கள் சன்னதியும், இராமானுசருக்கு ஒரு தனி சன்னதியும் உள்து.[2]

திருவிழாதொகு

இக்கோயிலில் கன்னட பஞ்சாங்கத்தின்படி திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் சைத்ர மாதத்தில் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் விழாவில் கூடுகின்றனர். கிருஷ்ண ஜெயந்தியன்று திருமஞ்சன உற்சவம் நடக்கிறது.மறுநாள் உறியடி உற்சவம் நடக்கிறது.[3]


குறிப்புகள்தொகு

  1. தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறு பகுதி.1 ,தேன்கனிக்கோட்டை வேட்டராயன் கோயில்- பேராசிரியர் தி.கோவிந்தன்
  2. http://paropakaara.blogspot.in/2012/06/denkanikottai.html
  3. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. பக். 49-53.