அறந்தாங்கி வட்டம்

அறந்தாங்கி வட்டம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 12 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக அறந்தாங்கி நகரம் உள்ளது.

இந்த வருவாய் வட்டத்தில் அறந்தாங்கி, அதானி, நாகுடி, பூவாத்தகுடி, அரசர்குளம், சில்லத்தூர் என 6 உள்வட்டங்களும், 102 வருவாய் கிராமங்களும் உள்ளது. [2]

இவ்வட்டத்தில் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 195,782 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 95,245 ஆண்களும், 100,537 பெண்களும் உள்ளனர். 49,468 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 79.2% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 81.12% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,056 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 21571 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 952 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 20,170 மற்றும் 458 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 89.19%, இசுலாமியர்கள் 8.84%, கிறித்தவர்கள் 1.93% மற்றும் பிறர் 0.03% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறந்தாங்கி_வட்டம்&oldid=2725068" இலிருந்து மீள்விக்கப்பட்டது