குளத்தூர் வட்டம்

குளத்தூர் வட்டம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக குளத்தூர் உள்ளது. இவ்வட்டத்தில் குன்னாண்டார்கோயில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் தொன்மை மிக்க குன்றாண்டார்கோயில் குகைக்கோவில் இவ்வட்டத்தில் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் நார்த்தாமலை, மாத்தூர், கிள்ளுக்கோட்டை, குன்னாண்டார்கோயில், கீரனூர் என 5 உள்வட்டங்களும், 65 வருவாய் கிராமங்களும் உள்ளன. [2]

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 1,62,524 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 81,433 ஆண்களும், 81,091 பெண்களும் உள்ளனர். 38,064 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 92.8% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 73.53% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 18744 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 958 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 25,937 மற்றும் 286 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 87.73%, இசுலாமியர்கள் 3.28% , கிறித்தவர்கள் 8.64% மற்றும் பிறர் 0.34% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளத்தூர்_வட்டம்&oldid=3344079" இலிருந்து மீள்விக்கப்பட்டது