கல்வராயன்மலை வட்டம்

கல்வராயன் மலை வட்டம் தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 7 வட்டங்களில் ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக நிறுவப்பட்ட போது 14 நவம்பர் 2019 அன்று புதிதாக இவ்வருவாய் வட்டம் நிறுவப்பட்டது.[1][2] [3][4]

கல்வராயன்மலை வட்டம்
ஆள்கூறுகள்: 11°48′N 78°42′E / 11.800°N 78.700°E / 11.800; 78.700
நாடு இந்தியா இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம்கள்ளக்குறிச்சி
தலைமையிடம்கல்வராயன் மலை
பரப்பளவு
 • மொத்தம்550.7 km2 (212.6 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்41,025
 • அடர்த்தி74/km2 (190/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

கல்வராயன்மலை வட்டம், கல்வராயன் ஊராட்சி ஒன்றியத்தின் 15 கிராம ஊராட்சிகளைக் கொண்டது.[5] இப்புதிய வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கல்வராயன் மலை ஆகும்.

புவியியல்

தொகு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்த கல்வராயன்மலை வட்டம் 550.7 சதுர கிலோமீட்டர்கள் (212.6 sq mi) பரப்பளவு கொண்டது. இதன் வடகிழக்கில் சங்கராபுரம் வட்டம், தென்கிழக்கில் சின்னசேலம் வட்டம் அமைந்துள்ளது.[6]இதன் தெற்கிலும், மேற்கிலும் சேலம் மாவட்டத்தின் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் உள்ளது.[7] இதன் வடமேற்கில் தருமபுரி மாவட்டத்தின் அரூர் வட்டம் உள்ளது.[8] மற்றும் வடக்கில் திருவண்ணாமலை மாவட்டத்தின் தண்டராம்பட்டு வட்டம் உள்ளது.[9] இவ்வட்டத்தில் மணி முத்தா ஆறுகள் மற்றும் கோமுகி ஆறு பாய்கிறது.[10]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 550.7 சதுர கிலோமீட்டர்கள் (212.6 sq mi) பரப்பளவு கொண்ட இவ்வட்டத்தின் மக்கள் தொகை 41,025 ஆகும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Bifurcation information". kallakurichi.nic.in. 2021-03-15. பார்க்கப்பட்ட நாள் 2021-03-16.
  2. புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு
  3. தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு
  4. "Tamil Nadu has a new district: Kallakurichi will be 33rd". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-01-09. பார்க்கப்பட்ட நாள் 2021-03-16.
  5. கல்வராயன்மலை கிராம ஊராட்சிகள்
  6. "Kallakurichi district map". kallakurichi.nic.in. 2021-03-13. பார்க்கப்பட்ட நாள் 2021-03-16.
  7. "Salem district map". salem.nic.in. 2021-03-16. பார்க்கப்பட்ட நாள் 2021-03-16.
  8. "Dharmapuri district map". dharmapuri.nic.in. 2021-03-16. பார்க்கப்பட்ட நாள் 2021-03-16.
  9. "Tiruvannamalai district census handbook (A)" (PDF). censusindia.gov.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2021-03-16.
  10. "Viluppuram district census handbook (A)" (PDF). censusindia.gov.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2021-03-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்வராயன்மலை_வட்டம்&oldid=3866737" இலிருந்து மீள்விக்கப்பட்டது