முதன்மை பட்டியைத் திறக்கவும்

புதுக்கோட்டை வட்டம்

புதுக்கோட்டை வட்டம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக புதுக்கோட்டை நகரம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மற்றும் வரப்பூர் என இரண்டு உள்வட்டங்களும், 40 வருவாய் கிராமங்களும் உள்ளன. [2]

இவ்வட்டத்தில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 228,282 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 113,921 ஆண்களும், 114,361 பெண்களும் உள்ளனர். 55,370 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 33.1% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 84.91% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,004 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 23814 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 957 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 36,798 மற்றும் 190 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 85.23%, இசுலாமியர்கள் 9.84%, கிறித்தவர்கள் 4.58% மற்றும் பிறர் 0.07%ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுக்கோட்டை_வட்டம்&oldid=2725190" இருந்து மீள்விக்கப்பட்டது