ஆண்டிப்பட்டி வட்டம்
ஆண்டிப்பட்டி வட்டம் , தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டங்களில் ஒன்றாகும். [1]இந்த வட்டத்தின் தலைமையகமாக ஆண்டிப்பட்டி நகரம் உள்ளது. ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மற்றும் கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் ஆண்டிபட்டி, கண்டமனூர், மயிலாடும்பாறை, இராஜதானி என 4 உள்வட்டங்களும், 25 வருவாய் கிராமங்களும் உள்ளது. அவைகள்:
- ஆண்டிபட்டி துண்டு (Pit) 1
- ஆண்டிபட்டி துண்டு 2
- பாலக்கோம்பை
- சித்தார்பட்டி
- ஜி.உசிலம்பட்டி
- கடமலைக்குண்டு
- கணவாய்ப்பட்டி
- கோத்தலூத்து
- கொத்தப்பட்டி
- கோவில்பட்டி
- குன்னூர்
- மரிக்குண்டு
- மேகமலை
- மொட்டனூத்து
- மயிலாடும்பாறை
- பழையகோட்டை
- புல்லிமான்கோம்பை
- ராஜதானி
- ராமகிருஷ்ணாபுரம்
- சண்முகசுந்தரபுரம்
- தேக்கம்பட்டி
- தெப்பம்பட்டி
- திம்மரசநாயக்கனூர் துண்டு-1
- திம்மரசநாயக்கனூர் துண்டு-2
- வள்ளல்நதி
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 58,902 வீடுகளும், 212,700 மக்கள்தொகையும் கொண்டது. மக்கள்தொகையில் 107,856 ஆண்களும்; 104,844 பெண்களும் உள்ளனர். மக்கள்தொகையில் 87.2% கிராமபுறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 71.47% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 972 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 21939 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 927 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 50,267 மற்றும் 366 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 97.9%, இசுலாமியர்கள் 0.38%, கிறித்தவர்கள் 1.45% & பிறர் 0.26% ஆகவுள்ளனர். [2]