கிருஷ்ணகிரி வட்டம்

கிருஷ்ணகிரி வட்டம் , தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக கிருஷ்ணகிரி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 131 வருவாய் கிராமங்கள் உள்ளன.[1]

கிருட்டிணகிரி ஊராட்சி ஒன்றியம் மற்றும் காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 597,071 ஆகும். அதில் 300,821 ஆண்களும், 296,250 பெண்களும் உள்ளனர். 141,113 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 77.8% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 72.85%மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 985பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 67555 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 924 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 72,114 மற்றும் 4,427 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 89.74%, இசுலாமியர்கள் 8.23%, கிறித்தவர்கள் 1.88% மற்றும் பிறர் 0.05% ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணகிரி_வட்டம்&oldid=2728996" இலிருந்து மீள்விக்கப்பட்டது