முதன்மை பட்டியைத் திறக்கவும்

சத்தியமங்கலம் வட்டம்

சத்தியமங்கலம் வட்டம் , தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக சத்தியமங்கலம் நகரம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சை புளியம்பட்டி, அரசூர், குத்தியாலத்தூர் என 5 உள்வட்டங்களும், 55 வருவாய் கிராமங்களும் உள்ளது. [2]

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 327,441 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 164,469 ஆண்களும், 162,972 பெண்களும் உள்ளனர். 93,994 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 72.1% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 65.37% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 991பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 29793 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 954 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 64,009 மற்றும் 13,816 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 93.96% , இசுலாமியர்கள் 2.84%% , கிறித்தவர்கள் 3.01% மற்றும் பிறர் 0.17% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தியமங்கலம்_வட்டம்&oldid=2726498" இருந்து மீள்விக்கப்பட்டது