ஒட்டபிடாரம் வட்டம்
ஒட்டபிடாரம் வட்டம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும். [1] இந்த வட்டத்தின் தலைமையகமாக ஓட்டப்பிடாரம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் எப்போதும்வென்றான், மணியாச்சி, ஒட்டப்பிடாரம், பரிவல்லிக்கோட்டை, பசுவந்தனை, வேடநத்தம் என 6 உள்வட்டங்களையும், 63 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2] இவ்வட்டத்தில் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
வட்டம் பிரிப்பு
தொகுஒட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி வருவாய் வட்டங்களின் 76 வருவாய் கிராமங்களைக் கொண்டு 2016ல் புதிய கயத்தாறு வட்டம் நிறுவப்பட்டது.[3]
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பின்வருமாறு உள்ளது. [4]
- மக்கள்தொகை = 123,356
- ஆண்கள் = 61,709
- பெண்கள் = 61,647
- குடும்பங்கள் = 32,955
- கிராமப்புற மக்கள்தொகை = 93.5%
- எழுத்தறிவு = 80.72%
- பாலின விகிதம் = 1,000 ஆண்களுக்கு, 999 பெண்கள்
- 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 12904
- குழந்தைகள் பாலின விகிதம் = 1000 ஆண் குழந்தைகளுக்கு, 953 பெண் குழந்தைகள்
- பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் = 51,216 மற்றும் 162
சமயம்
தொகு- இந்துக்கள் = 88.57%
- இசுலாமியர்கள் = 0.37%
- கிறித்தவர்கள் = 10.81%
- பிறர்= 0.25%