குன்றத்தூர் வட்டம்

குன்றத்தூர் வட்டம், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவம்பர், 2019-இல் புதிதாக நிறுவப்பட்ட வருவாய் வட்டம் ஆகும்.[1][2] இப்புதிய வட்டம் பல்லாவரம் வட்டத்தில் இருந்த குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் 42 கிராம ஊராட்சிகளைக்[3] கொண்டு நிறுவப்பட்டது. இவ்வட்டத்தின் தலைமையிடம் குன்றத்தூர் பேரூராட்சியாகும்.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குன்றத்தூர் வட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,47,452 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 73,790 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,258 ஆக உள்ளது. [4]

மேற்கோள்கள் தொகு

  1. தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு
  2. [புதிய வருவாய் வட்டங்கள் – அரசிதழ் வெளியீடு
  3. குன்றத்தூர் பிளாக்
  4. 2011 Census of Kancheepuram District
"https://ta.wikipedia.org/w/index.php?title=குன்றத்தூர்_வட்டம்&oldid=2926698" இலிருந்து மீள்விக்கப்பட்டது