குன்றத்தூர்
குன்றத்தூர் (ஆங்கிலம்:Kundrathur), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
குன்றத்தூர் | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
வட்டம் | பல்லாவரம் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | மகேஸ்வரி ரவிக்குமார், இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
54,986 (2011[update]) • 6,110/km2 (15,825/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 9 சதுர கிலோமீட்டர்கள் (3.5 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/kunrathur |
குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின், வட்டார வளர்ச்சி அலுவலகம் குன்றத்தூரில் இயங்குகிறது. இது சென்னை பெருநகர் பகுதியின் ஒரு அங்கம் ஆகும்
குன்றத்தூர் பேரூராட்சி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லைக்குட்பட்ட வளர்ந்து வரும் பகுதியாகும். பெரியபுராணம் எனும் நூலை இயற்றிய சேக்கிழார் பிறந்த ஊராகும். இவ்வூரின் குன்றில் அமைந்துள்ள முருகன் கோயில் மிகவும் புகழ் பெற்றது. மேலும் இங்குள்ள திருநாகேஷ்சுவர திருக்கோயில், சென்னையை சுற்றியுள்ள நவக்கிரகத் தலங்களுள் ஒன்றாகும். குன்றத்தூரை ஒட்டி சென்னை மாநகர வெளிவட்ட சிறப்பு புறவழிச் சாலையான வண்டலூர் - மீஞ்சூர் சாலை அமைந்துள்ளது.
அமைவிடம்தொகு
குன்றத்தூர், காஞ்சிபுரத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 9 கி.மீ தொலைவில் உள்ள பல்லாவரம் தொடருந்து நிலையம் ஆகும். இதன் வடக்கே போரூர் 9.5 கி.மீ; தெற்கே தாம்பரம் 10 கி.மீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்புதொகு
9 சகிமீ பரப்பும், 22 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி, திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[4]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 54,986 மக்கள்தொகை கொண்டது.[5]
கோவில்கள்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ [ http://www.townpanchayat.in/kunrathur குன்றத்தூர் பேரூராட்சியின் இணையதளம்]
- ↑ Kundrathur Population Census 2011