பல்லாவரம் தொடருந்து நிலையம்

பல்லாவரம் தொடருந்து நிலையம் (Pallavaram railway station, நிலையக் குறியீடு:PV) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது.

பல்லாவரம்
சென்னை புறநகர் தொடருந்து நிலையம் மற்றும் தென்னக இரயில்வே நிலையம்
பல்லாவரம் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்இரயில்வே நிலையம் சாலை, அருமலை சாவடி, பல்லாவரம், சென்னை, தமிழ்நாடு - 600 043, இந்தியா
ஆள்கூறுகள்12°58′2″N 80°9′7″E / 12.96722°N 80.15194°E / 12.96722; 80.15194
உரிமம்இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே
தடங்கள்தெற்கு மற்றும் தென் மேற்கு புறநகர் வழித்தடங்கள்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுPV
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1900களின் முற்பகுதி
மின்சாரமயம்15 நவம்பர் 1931[1]
முந்தைய பெயர்கள்தென்னிந்திய இரயில்வே
அமைவிடம்
பல்லாவரம் is located in சென்னை
பல்லாவரம்
பல்லாவரம்
சென்னை வரைபடத்தில் உள்ள இடம்
பல்லாவரம் is located in தமிழ் நாடு
பல்லாவரம்
பல்லாவரம்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
பல்லாவரம் is located in இந்தியா
பல்லாவரம்
பல்லாவரம்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

இது பல்லாவரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளான பம்மல், நாகல்கேனி, அனகாபுத்தூர், பொழிச்சலூர், கோவல் பஜார், திருநீர்மலை, குன்றத்தூர் மற்றும் கீழ்க்கட்டளை ஆகிய பகுதி மக்களின் போக்குவரத்துக்கு சேவை செய்கிறது. இது சென்னைக் கடற்கரையிலிருந்து சுமார் 23 கி.மீ (14 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. மேலும் கடல் மட்டத்திலிருந்து 4மீ (13 அடி) உயரத்தில் உள்ளது.

வரலாறு

தொகு
 
பல்லாவரம் தொடருந்து நிலையம்

இந்த நிலையம் சென்னை நகரின் முதல் புறநகர் வழித்தடமான சென்னைக் கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. 1928இல் தொடங்கி மார்ச் 1931இல் இருப்புப்பாதை பணிகள் நிறைவடைந்தவுடன், புறநகர் தொடருந்து சேவைகள் 11 மே 1931 அன்று சென்னைக் கடற்கரைக்கும் - தாம்பரத்திற்கும் இடையில் தொடங்கப்பட்டன. இது நவம்பர் 15, 1931இல் மின்மயமாக்கப்பட்டது.[1]

சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Electric Traction - I". IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)

வெளி இணைப்புகள்

தொகு