பல்லாவரம் (ஆங்கிலம்: Pallavaram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். மேலும் சென்னையின் புறநகர் பகுதியும் ஆகும். இவ்வூரில் மின்சார தொடருந்து நிலையம் உள்ளது.[3]

பல்லாவரம்
—  தாம்பரம் மாநகராட்சி  —
பல்லாவரம்
அமைவிடம்: பல்லாவரம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 12°58′03″N 80°08′57″E / 12.9675°N 80.1491°E / 12.9675; 80.1491
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் செங்கல்பட்டு
வட்டம் பல்லாவரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் எஸ். அருண்ராஜ், இ. ஆ. ப
நகராட்சி தலைவர்
சட்டமன்றத் தொகுதி பல்லாவரம்
சட்டமன்ற உறுப்பினர்

இ. கருணாநிதி (திமுக)

மக்கள் தொகை 2,15,417 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


50 மீட்டர்கள் (160 அடி)

அமைவிடம்

தொகு

பல்லாவரம் காஞ்சிபுரத்திலிருந்து 65 கி.மீ. தொலைவிலும், எழும்பூரிலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

வரலாறு

தொகு

பல்லவர்புரம் என்ற பெயர் பின்னர் பல்லாவரம் என்று மாறியது.[4] பல்லாவரம் நகரம் முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

புவியியல்

தொகு
 
பல்லாவரம் குன்று

இவ்வூரின் அமைவிடம் 12°59′N 80°11′E / 12.98°N 80.18°E / 12.98; 80.18 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 16 மீட்டர் (52 அடி) உயரத்தில் இருக்கின்றது. அரசு ஆவணங்களில் பல்லவபுரம் என்றே குறிப்பிடப்படும்.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 56,135 குடும்பங்களையும் கொண்ட இப்பகுதியின் மக்கள்தொகை 2.15,417 ஆகும். இப்பகுதியின் எழுத்தறிவு 92.9% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 996 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 22258 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 978 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 34,199 மற்றும் 1,031 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 91.51%, இசுலாமியர்கள் 6.92% , கிறித்தவர்கள் 9.12% , தமிழ்ச் சமணர்கள் 0.15%, மற்றும் பிறர் 0.93% ஆகவுள்ளனர்.

தாம்பரம் மாநகராட்சியுடன் இணைத்தல்

தொகு

3 நவம்பர் 2021 அன்று பல்லாவரம் பகுதி தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. பல்லாவரம் மின்சார தொடருந்து நிலையம்
  4. மா. இராசமாணிக்கனார் (முதற் பதிப்பு 1944; மறு அச்சு 2000). பல்லவர் வரலாறு. சென்னை: தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். pp. 19. {{cite book}}: Check date values in: |year= (help)
  5. "Pallavaram". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பல்லாவரம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.




"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லாவரம்&oldid=4153849" இலிருந்து மீள்விக்கப்பட்டது