திருநீர்மலை

திருநீர்மலை (ஆங்கிலம்:Thiruneermalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மேலும் இது சென்னையின் புறநகர் பகுதி ஆகும். 108 வைணவத் திவ்விய தேசங்களில் ஒன்றான திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் கோயில் இங்கு அமைந்துள்ளது.

திருநீர்மலை
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் செங்கல்பட்டு
வட்டம் பல்லாவரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆ. ர. ராகுல் நாத், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

30,702 (2011)

6,396/km2 (16,566/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 4.80 சதுர கிலோமீட்டர்கள் (1.85 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/thiruneermalai

தாம்பரம் மாநகராட்சியுடன் இணைத்தல் தொகு

3 நவம்பர் 2021 அன்று இந்த பேரூராட்சியானது தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

அமைவிடம் தொகு

திருநீர்மலை அருகே 4-5 கிமீ தொலைவில் பல்லாவரம், பம்மல், குன்றத்தூர் அமைந்துள்ளது. இது காஞ்சிபுரத்திலிருந்து 56 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

4.80 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 216 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பல்லாவரம் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[3][4]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7,660 வீடுகளும், 30,702 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 90.50% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 998 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

சிறப்புகள் தொகு

 
திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் கோயில் கோபுரம்

திருநீர்மலை, ஒரு திவ்வியதேச தலமாகும். இங்குள்ள திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் கோயில், பெருமாள் நீர்வண்ணராக திருநீர் மலையடிவாரத்தில் அருள் புரிகின்றார். மலைமீது ரங்கநாதராகவும், உலகளந்தவராகவும், நரசிம்மராகவும் சேவை சாதிக்கின்றார். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலமாகும்.[6]

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. திருநீர்மலை பேரூராட்சியின் இணையதளம்
  4. Thiruneermalai Town Panchayat
  5. Thiruneermalai Population Census 2011
  6. http://temple.dinamalar.com/new.php?id=497

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருநீர்மலை&oldid=3629862" இலிருந்து மீள்விக்கப்பட்டது