திருமங்கையாழ்வார்

பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் மற்றும் இறுதி அழ்வார் | கள்ளர் குலத்தில் பிறந்தவர்
(திருமங்கை ஆழ்வார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருமங்கையாழ்வார் (Thirumangai Alvar) என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர். சோழ நாட்டில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் கள்ளர் குடியில் பிறந்தார்.[1] இவரது இயற்பெயர் கலியன் ஆகும். ஆதியில் இவர் சோழமன்னனுக்குப் படைத்தலைவனாக இருந்தார். ஒருமுறை போர்க்களத்தில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவரைச் சோழதேசத்தின் 'திருமங்கை' நாட்டின் மன்னனாக்கினான். அன்று முதல் இவர் "திருமங்கை மன்னன்" என அழைக்கப்பட்டார்.

திருமங்கை ஆழ்வார்
பிறப்புதிருக்குறையலூர், சீர்காழி தமிழ்நாடு
இயற்பெயர்கலியன்
குருசேனை முதலியார், நறையூர் நம்பி, திருக்கண்ணபுரம் சவுரிப் பெருமாள்
இலக்கிய பணிகள்பெரிய திருமொழி திருக்குறுந்தாண்டகம் திருநெடுந்தாண்டகம் திருஎழுகூற்றிருக்கை சிறிய திருமடல் பெரிய திருமடல்

வைணவக் காதல்

திருமங்கையாழ்வார் சோழ நாட்டில் உள்ள திருக்குரையலூரில் கள்ளர் குடியில் பிறந்தார்.[1] குமுதவல்லி எனும் மங்கை மீது கொண்ட காதலினால் வைணவம் அனுசரிக்க ஆரம்பித்தவர், அவளின் விருப்பத்தின்படி திருமால் அடியார்களுக்குத் தினமும் அன்னம் இடுவதையும், திருக்கோயில் கைங்கரியங்களில் ஈடுபடுவதையும் செய்துவரலானார். காலப்பொழுதில் தன்னை முழுமையாக இதில் ஈடுபடுத்திக் கொண்டு தன் செல்வங்களையும், அரசு செல்வங்களையும் முழுக்க இழந்தவரானார். கடமையை நிறைவேற்ற யாசகமும் கை கொடுக்காதப்படியால் களவாடியாவது அடியார்களுக்குத் தினமும் அன்னம் இடுவதையும், திருவரங்கத் திருக்கோயிலின் கைங்கரியங்களையும் செய்துவந்தார். இச்செயலை மெச்சி, இறைவனே இவர் களவாடும் பாதையில் வந்து, இவரை ஆட்கொண்டதோடு வேண்டிய செல்வங்களையும் கொடுத்தருளினார்.

இலக்கிய பணி

இவர் 1137 பாடல்கள் பாடியுள்ளார். அவைகளாவன

 
திருமங்கையாழ்வாரின் சிலை ஆழ்வார்திருநாகரி திருக்கோவில்
  • திருவெழுக்கூற்றிருக்கை (ஒரு பாடல் - 47 அடிகள்)
  • சிறிய திருமடல் (ஒரு பாடல் - 155 அடிகள்)
  • பெரிய திருமடல் (ஒரு பாடல் - 297 அடிகள்)
  • திருநெடுந்தாண்டகம் (30 பாடல்கள்)
  • திருக்குறுந் தாண்டகம் (20 பாடல்கள்)
  • பெரிய திருமொழி (1084 பாடல்கள்)

மேற்கோள்கள்

  1. 1.0 1.1
    • முனைவர் சீ. வசந்தி, தொகுப்பாசிரியர் (ஏப்ரல் (2011)). திருவிடந்தையும் - திருமங்கை ஆழ்வாரும்.. கல்வெட்டு இதழ் திருவள்ளூர் ஆண்டு 2042 சித்திரைத் திங்கள் - திருமங்கை ஆழ்வார் செப்புத்திருமேனி - கல்வெட்டு - காலாண்டிதழ் -85 தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை. p. 1. https://www.tamildigitallibrary.in/admin/assets/periodicals/TVA_PRL_0006022_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_2011.pdf. "திருமங்கை மன்னர் கள்ளர் மரபில் பிறந்தவர்". 
    • தமிழக அரசின் கீழைக்கலை ஒலைச்சுவடி. தமிழக அரசின் கீழைக்கலை ஒலைச்சுவடி நூலக நிறுவனம். 1957. p. 1351. கலியுகம் 397 - க்கு மேல் நள வருஷம் கார்த்திகை மாதம் பூர்ணிமை, வியாழக்கிழமை, கிருத்திகா நக்ஷத்திரம் கொண்ட நாளில் திருக்குறையலு ரிலே மிலேச்ச வம்சத்தில் (கள்ளர் குலத்திலே) ஸ்ரீகார்முகாம்சராய்த் திருமங்கையாழ்வார் அவதரித்தருளினார் .
    • C. V. Rajagopalachari, ed. (1972). Failure of Gandhism and Communism. p. 84. Tirumanga Alwar the compose of another thousand songs is a sinner turned Saint. He was born of the Kallar caste

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமங்கையாழ்வார்&oldid=4126668" இலிருந்து மீள்விக்கப்பட்டது