சிறிய திருமடல்

சிறிய திருமடல் மடல் என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த ஒரு தமிழ் நூல். இதனை இயற்றியவர் திருமங்கையாழ்வார். இது நாராயணனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. மடல் இலக்கியவகையின் முன்னோடி நூல்களில் ஒன்றாகக் காணப்படும் இந்நூல் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் (பாசுரம்: 2673 - 2712) பகுதியாகும். பெண்கள் மடலூர்தல் இல்லை என்ற பழைய மரபை மாற்றி இயற்றப்பட்டுள்ளது இந்நூல்.

தலைவன் “நாராயண”னின் பெயருக்கு ஏற்ப நூலின் ஒவ்வொரு அடியிலும் எதுகை அமைந்துள்ளது.

எடுத்துக்காட்டு

நீரார் நெடுங்கயத்தைச் சென்றலைக்க நின்றுரப்பி
ரா யிரம்பணவெங் கோவியல் நாகத்தை
வாராய் எனக்கென்று மற்றதன் மத்தகத்து
சீரார் திருவடியால் பாய்ந்தான்.

மேலும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிய_திருமடல்&oldid=1429633" இருந்து மீள்விக்கப்பட்டது