எதுகை
யாப்பிலக்கணத்தில் தொடை என வழங்கப்படும் செய்யுள் உறுப்பு வகைகளில் எதுகை முக்கியமானதாகும். வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்களின் முதலெழுத்துக்கள் ஒத்துவரின் மோனை எனப்படின், இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் எதுகை ஆகும்.
என்பது தொல்காப்பியர் கூற்று.
- எடுத்துக்காட்டு
- பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
- இறைவன் அடிசேரா தார்
இக்குறளில் "நீந்துவர்", "நீந்தார்" ஆகிய இரண்டு சீர்களில் உள்ள இரண்டாம் எழுத்து "ந்" ஒன்றாக அமைவதால் இவை எதுகை எனச் சுட்டப்படுகின்றன.
எதுகை வகைகள்
தொகுஎதுகை சீர்களிலும், அடிகளிலும் வரக்கூடும். இவை முறையே சீரெதுகை என்றும் அடியெதுகை என்றும் அழைக்கப்படுகின்றன. பொதுவாக அடியெதுகையே செய்யுள்களில் சிறப்புப் பெறுகின்றது. சீரெதுகை அதிகம் கைக்கொள்ளப் படுவதில்லை.
இந்த நூலின் விருத்தியுரையில் 7 வகையான எதுகைகள் காட்டப்படுகின்றன. [3]
பொன்னின் அன்ன பொறிசுணங்கு ஏந்தி -- (இணை எதுகை)
பன்மலர்க் கோங்கின் தன்நலம் கவற்றி -- (பொழிப்பு எதுகை)
மின்னவிர் ஒளிவடம் தாங்கி மன்னிய -- (ஒரூஉ எதுகை)
தன்னவிர் மென்முலை மின்னிடை வருத்தி -- (கூழை எதுகை)
என்னையும் இடுக்கண் துன்னுவித்து இன்னடை -- (மேற்கதுவாய் எதுகை)
அன்ன மென்னடை போலப் பன்மலர்க் -- (கீழ்க்கதுவாய் எதுகை)
கன்னியம் புன்னை இன்னிழல் துன்னிய -- (முற்று எதுகை)
மயிலேர் சாயலவ் வாணுதல்
அயில்வேல் உண்கண்எம் அறிவு தொலைத்தனவே