குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] பல்லாவரம் வட்டத்தில் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், நாற்பத்தி இரண்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குன்றத்தூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 2,47,452 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 73,790 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,258 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுகுன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- கோவூர்
- கொல்லச்சேரி
- கொளப்பாக்கம்
- காவனூர்
- கரசங்கால்
- இரண்டாங்கட்டளை
- கெருகம்பாக்கம்
- எழிச்சூர்
- எருமையூர்
- அய்யப்பன்தாங்கல்
- அமரம்பேடு
- ஆதனூர்
- கொழுமணிவாக்கம்
- சோமங்கலம்
- வட்டம்பாக்கம்
- வரதராஜபுரம்
- வளையக்கரனண
- வைப்பூர்
- வடக்குப்பட்டு
- திருமுடிவாக்கம்
- தரப்பாக்கம்
- தண்டலம்
- சிறுகளத்தூர்
- சிக்கராயபுரம்
- சேத்துப்பட்டு
- செரப்பணஞ்சேரி
- சென்னக்குப்பம்
- சாலமங்கலம்
- பூந்தண்டலம்
- பெரியபணிச்சேரி
- பழந்தண்டலம்
- பரணிபுத்தூர்
- படப்பை
- ஒரத்தூர்
- நாட்டரசன்பட்டு
- நந்தம்பாக்கம்
- நடுவீரப்பட்டு
- மணிமங்கலம்
- மலையம்பாக்கம்
- மலைப்பட்டு
- மாடம்பாக்கம்