திண்டிவனம்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

திண்டிவனம் (ஆங்கிலம்:Tindivanam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை நகராட்சியும் ஆகும்.

திண்டிவனம்
தேர்வு நிலை நகராட்சி
திண்டிவனம் is located in தமிழ் நாடு
திண்டிவனம்
திண்டிவனம்
திண்டிவனம், தமிழ்நாடு
திண்டிவனம் is located in இந்தியா
திண்டிவனம்
திண்டிவனம்
திண்டிவனம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°13′36″N 79°39′01″E / 12.226700°N 79.650400°E / 12.226700; 79.650400
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்விழுப்புரம்
மண்டலம்தொண்டை மண்டலம்
சட்டமன்றத் தொகுதிதிண்டிவனம் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதிவிழுப்புரம் மக்களவைத் தொகுதி
தோற்றுவித்தவர்தமிழ்நாடு அரசு
அரசு
 • வகைதேர்வு நிலை நகராட்சி
 • நிர்வாகம்திண்டிவனம் நகராட்சி
 • மக்களவை உறுப்பினர்திரு.ரவிக்குமார்
 • சட்டமன்ற உறுப்பினர்திரு.அர்ஜுனன்
 • மாவட்ட ஆட்சியர்திரு. மோகன், இ.ஆ.ப.
பரப்பளவு[1]
 • மொத்தம்11.66 km2 (4.50 sq mi)
பரப்பளவு தரவரிசை58 மீட்டர்கள்
ஏற்றம்70 m (230 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்72,796
 • அடர்த்தி6,200/km2 (16,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு604 001, 604 002
இந்தியாவில் தொலைபேசி எண்கள்04147
வாகனப் பதிவுTN 16 & TN 32
திண்டிவனம் ஊராட்சி ஒன்றியம்திண்டிவனம்
சென்னையிலிருந்து தொலைவு128 கி.மீ. (80 மைல்)
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு68 கி.மீ. (42 மைல்)
விழுப்புரத்திலிருந்து தொலைவு41 கி.மீ. (26 மைல்)
ஆரணியிலிருந்து தொலைவு79 கி.மீ. (49 மைல்)
புதுச்சேரியிலிருந்து தொலைவு38 கி.மீ. (24 மைல்)
திருச்சியிலிருந்து தொலைவு201 கி.மீ. (125 மைல்)
பெங்களூரிலிருந்து தொலைவு270 கி.மீ. (168 மைல்)
இணையதளம்www.tindivanam.tn.nic
திண்டிவனம் தொடருந்து நிலையம்

பெயர்க் காரணம் தொகு

திண்டிவனம் என்பது திந்திரி வனம் என்ற சொல்லில் இருந்து மருவிய சொல்லாகும். இதன் தமிழ்ப் பெயர் புளியங்காடு '"புளியங்குடில்"' என்பதாகும். திந்திரி என்றால் புளிமரம், வனம் என்றால் காடு. இங்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ இலட்சுமி நரசிம்மர் (பெருமாள்) திருக்கோவிலில் ஸ்ரீ நரசிம்மரின் சீற்றதைத் தணிக்கும் பொருட்டு திருமகள் தாயார் ஸ்ரீநரசிம்மரின் இடத்தொடையில் அமர்ந்தபடி ஸ்ரீநரசிம்மரை இருகரங்கள் கூப்பி வழிபடுவது வேறெங்கும் இல்லாத தனிச் சிறப்பு திண்டிவனதிற்கு உண்டு. இது குறித்து திருவாய்மொழி அறியலாம். அதே போல் இங்குள்ள ஈஸ்வரருக்கு திந்திரிணீஸ்வரர் என்று பெயர்.

அமைவிடம் தொகு

திருச்சிராப்பள்ளி - விழுப்புரம் - சென்னை சாலையில் விழுப்புரத்தில் இருந்து வடக்கே 40 கி.மீ தொலைவில் திண்டிவனம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்கு திண்டிவனம் வழியாகத் தான் செல்லவேண்டும். புதுச்சேரி - திருவண்ணாமலை - பெங்களூரு சாலையில் செஞ்சி அமைந்துள்ளது. வேலூர், காஞ்சிபுரம் மற்றும் ஆரணியிலிருந்து வரும் சாலையானது திண்டிவனம் வழியாக தான் புதுச்சேரிக்கு செல்ல சாலை உள்ளது.

புவியியல் தொகு

இவ்வூரின் அமைவிடம் 12°15′N 79°39′E / 12.25°N 79.65°E / 12.25; 79.65 ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 58 மீட்டர் (190 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 17,088 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 72,796 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 87.4% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,003 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7664 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 954 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 12,078 மற்றும் 354 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 82.16%, இசுலாமியர்கள் 11.95% , கிறித்தவர்கள் 4.39%, தமிழ்ச் சமணர்கள் 1.36.%, மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.[3]

வெளி இணைப்புகள் தொகு

ஆதாரங்கள் தொகு

  1. "District Census Handbook : Tiruvannamalai" (PDF). p. 30. http://www.censusindia.gov.in/2011census/dchb/3305_PART_B_DCHB_TIRUVANNAMALAI.pdf. பார்த்த நாள்: 21 June 2017. 
  2. "Tindivanam". Falling Rain Genomics, Inc. http://www.fallingrain.com/world/IN/25/Tindivanam.html. பார்த்த நாள்: ஜனவரி 30, 2007. 
  3. நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=திண்டிவனம்&oldid=3697422" இருந்து மீள்விக்கப்பட்டது