பேராவூரணி

தமிழ்நாடு, இந்தியாவில் உள்ள ஒரு நகராட்சி

பேராவூரணி (ஆங்கிலம்:Peravurani), தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி வட்டம் மற்றும் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேராவூரணி ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு தேர்வு நிலை பேரூராட்சியும் ஆகும்.[3]

பேராவூரணி
—  தேர்வு நிலை பேரூராட்சி  —
பேராவூரணி
இருப்பிடம்: பேராவூரணி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°18′N 79°11′E / 10.3°N 79.18°E / 10.3; 79.18
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
வட்டம் பேராவூரணி வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
சட்டமன்ற உறுப்பினர்
மக்கள் தொகை

அடர்த்தி

22,084 (2011)

1,184/km2 (3,067/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


16 மீட்டர்கள் (52 அடி)

குறியீடுகள்

புவியியல்

தொகு

இவ்வூரின் அமைவிடம் 10°18′N 79°11′E / 10.3°N 79.18°E / 10.3; 79.18 ஆகும்.[4] இவ்வூர், மாவட்டத்தின் தென்கோடி பகுதியில் இருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 16 மீட்டர் (52 அடி) உயரத்தில் இருக்கின்றது.

அரசியல்

தொகு

இது பாராளுமன்றத் தேர்தலுக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பேராவூரணி தொகுதியாகவும் உள்ளது. [5]

மக்கள்தொகை

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 5,853 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 22,084 ஆகும். அதில் 10,643 ஆண்களும், 11,441 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.7% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,075 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2122 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 961 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் 45% உள்ளனர். ஆகவுள்ளமக்கள்தொகையில் இந்துக்கள் 83.45% , இசுலாமியர்கள் 9.98%, கிறித்தவர்கள் 6.52% மற்றும் பிறர் 0.05%ஆகவுள்ளனர்.[6]

சுற்றுலாத்தலம்

தொகு
  • பேராவூரணி அருகே 14 கிலோமீட்டர் தொலைவில் மனோரா எனும் கடற்கரைச் சுற்றுலாத்தளமாக உள்ளது.
  • இங்குள்ள நீலகண்ட விநாயகர் கோவில் இந்தப் பகுதியில் மிகவும் பிரசித்திப்பெற்றது.
  • ரெட்டவயலில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ கண்ணாயிரமூர்த்தி அய்யனார் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.(பேராவூரணியிலிருந்து12 கிலோமீட்டர் தொலைவில்).
  • அருகில் உள்ள சேதுபாவா சத்திரத்தில் சிறிய மீன்பிடி துறைமுகம் உள்ளது மற்றும் இங்கு நடக்கும் மீன் ஏலமும்.
  • படப்பனார்வயல் ஆலடியார் கோவில். பேராவூரணி அருகே அறந்தாங்கி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
  • பின்னவாசல் மாரியம்மன் கோவில் மற்றும் பின்னவாசல் சிவன் கோவில்.
  • ஆத்தாளூர் வீரமாகளியம்மன் கோவில்,மேற்கு நோக்கி சந்நதியானது அமைந்திருக்கும்.
  • பாளத்தளி துர்க்கை அம்மன் கோயில்
  • கழனிவாசல் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் [7]
  • விளங்குளம் ஸ்ரீ அபிவிருத்திநாயகி உடனுறை ஸ்ரீ அட்சபுரீஸ்வரர் கோயில் சனி பகவான் ஸ்தலமாக விளங்கிவருகிறது.
  • ஒட்டங்காடு அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோயில்.
  • மருக்கப்பள்ளம் சிவன் கோயில் போன்றவை மிகவும் பிரசித்திப்பெற்றதாகும்.
  • சொர்ணக்காடு காளியம்மன் கோவில் மற்றும் ராமர் கோவில், கொப்பிமுனி கோவில், விநாயகர் கோவில் சிறப்பு அம்சமாக திகழ்கிறது.பேராவூரணி அருகே அறந்தாங்கி செல்லும் சாலையில் 9.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.


  • ஆதனூரில் 1847 ஆம் வருடம் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும்,புனித அன்னாள் தேவாலயம் ஒன்றும் உள்ளது.

தொகுத்தவர் V.R.ஆசிக் சொர்ணக்காடு...

தொழில்

தொகு
  • இப்பகுதியில் நெல் விளையும் வயல்வெளிகள் நிறைந்து காணப்படுகின்றன.மேலும் இப்பகுதி காவிரி பாயும் கடைமடை பகுதியாகும்.
  • தமிழ்நாட்டிலயே இங்கு தான் தென்னை சாகுபடி அதிகம்.
  • இங்கு விளையும் தேங்காய்கள் எண்ணெய் உற்பத்திக்காக காங்கேயம், பல்லடம் போன்ற ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் தினமும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
  • இந்த தொகுதியின் கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தொழிலும் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-08-07. பார்க்கப்பட்ட நாள் 2013-10-23.
  4. "Peravurani". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
  5. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-13.
  6. நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-28. பார்க்கப்பட்ட நாள் 2015-09-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேராவூரணி&oldid=3888019" இலிருந்து மீள்விக்கப்பட்டது