பெரியகுளம் வட்டம்
பெரியகுளம் வட்டம் , தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டங்களில் ஒன்றாகும்.[1]இவ்வட்டத்தில் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் என பெரியகுளம் மற்றும் தேவதானப்பட்டி என 2 உள்வட்டங்களும், 22 வருவாய் கிராமங்களும் உள்ளது. அவைகள்:
- ஏ.காமாட்சிபுரம்
- தேவதானபட்டி துண்டு-1
- தேவதானபட்டி துண்டு-2
- எண்டப்புளி
- கெங்குவார்பட்டி துண்டு-1
- கெங்குவார்பட்டி துண்டு-2
- ஜெயமங்கலம் துண்டு-1
- ஜெயமங்கலம் துண்டு-2
- கீழ வடகரை
- குள்ளப்புரம்
- மேல்மங்கலம் துண்டு-1
- மேல்மங்கலம் துண்டு-2
- புதுக்கோட்டை
- சில்வார்பட்டி
- தாமரைக்குளம் துண்டு-1
- தாமரைக்குளம் துண்டு-2
- தென்கரை துண்டு-1
- தென்கரை துண்டு-2
- வடகரை துண்டு-1
- வடகரை துண்டு-2
- வடவீரநாயக்கன்பட்டி
- வாடிப்பட்டி
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 57,001 வீடுகளும், 217,358 மக்கள்தொகையும் கொண்டது. மக்கள்தொகையில் 109,907 ஆண்களும்; 107,451 பெண்களும் உள்ளனர். மக்கள்தொகையில் 47.3% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 77.39% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 978 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 21,825 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 932 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 58,057 மற்றும் 431 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 89.64%, இசுலாமியர்கள் 7.35%, கிறித்தவர்கள் 2.84% & பிறர் 0.18% ஆகவுள்ளனர். [2]