போடிநாயக்கனூர் வட்டம்
தென்காசியம்பதி வட்டம் , தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக தென்காசியம்பதி நகரம் உள்ளது. இவ்வட்டத்தில் தென்காசியம்பதி ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் போடிநாயக்கனூர், கோடாங்கிப்பட்டி, ராசிங்காபுரம் என 3 என உள்வட்டங்களும், 15 வருவாய் கிராமங்களும் உள்ளது.[1]அவைகள்:
- அகமலை
- பி.அம்மாபட்டி
- பி.மீனாட்சிபுரம்
- போடி மேற்கு மலைகள்
- போடிநாயக்கனூர் நகரம்
- போடி வடக்கு மலைகள்
- பூதிப்புரம்
- டொம்புச்சேரி
- கோடாங்கிபட்டி
- கூளையனூர்
- கொட்டகுடி
- மேலச்சொக்கநாதபுரம்
- ராசிங்காபுரம்
- சிலமலை
- உப்புக்கோட்டை
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 49,589 வீடுகளும், 180,789 மக்கள்தொகையும் கொண்டது. மக்கள்தொகையில் 90,426 ஆண்களும்; 90,363 பெண்களும் உள்ளனர். மக்கள்தொகையில் 60.9% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 76.96% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 999 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 16,930 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 946 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 29,974 மற்றும் 695 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 96.48%, இசுலாமியர்கள் 2.52%, கிறித்தவர்கள் 0.91 & பிறர் 0.08% ஆகவுள்ளனர்.[2]