பென்னாகரம் வட்டம்

பென்னாகரம் வட்டம், தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக பென்னாகரம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 39 வருவாய் கிராமங்கள் உள்ளன.இவ்வட்டம் பென்னாகரம், பெரும்பாலை, பாப்பாரப்பட்டி, சுஞ்சல்நாதம் என 4 உள்வட்டங்கள் கொண்டது.

இவ்வட்டத்தில் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஏரியூர் ஊராட்சி ஒன்றியம்உள்ளது.


பென்னாகரம் பகுதியில் பல அரசு பள்ளிகள் உள்ளன. அவற்றுள் குறிப்பிட தக்கவை

அரசு மேல்நிலைப்பள்ளி பி.அக்ராகரம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாங்கரை ஆகும்.

பரப்பளவுதொகு

பென்னாகரம் வட்டத்தின் பரப்பளவு சுமார் 1,13,027 எக்டேர்களாகும்.[2] இது தர்மபுரி மாவட்டத்தின் நிலப்பரப்பில் 25 சதவிகிதம்.

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,34,853 மக்கள் பென்னாகரம் வட்டத்தில் வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 56% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 64%, பெண்களின் கல்வியறிவு 48% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99%[4] விட குறைவானது. பென்னாகரம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மேற்கோள்கள்தொகு

  1. தர்மபுரி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்
  2. "தர்மபுரி மாவட்ட இணையதளம்". 2011-04-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 ஆகத்து 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை - பென்னாகரம் வட்டம்". 22 ஆகத்து 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. "இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 - கல்வியறிவு". 22 ஆகத்து 2014 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்னாகரம்_வட்டம்&oldid=3668968" இருந்து மீள்விக்கப்பட்டது