இலுப்பூர் வட்டம்
இலுப்பூர் வட்டம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக இலுப்பூர் நகரம் உள்ளது.
இந்த வட்டத்தில் குடுமியான்மலை, சித்தன்னவாசல், வீரப்பப்பட்டி மற்றும் இலுப்பூர் என 4 உள்வட்டங்களும், 58 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]
அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 219,491 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 109,203 ஆண்களும், 110,288 பெண்களும் உள்ளனர். 50,022 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 84.5% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 70.53% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,010 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 26594 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 954 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 46,816 மற்றும் 129 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.51%), இசுலாமியர்கள் 5.11%, கிறித்தவர்கள் 4.17% மற்றும் பிறர் 0.21% ஆகவுள்ளனர்.[3]
==மேற்கோள்கள்==