ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்

ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம் (Srivilliputhur Taluk) தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரம் உள்ளது. இவ்வட்டத்திலிருந்து வத்திராயிருப்பு வட்டம் பிரிந்த பின், இந்த வட்டத்தின் கீழ் மல்லி, ஸ்ரீவில்லிபுத்தூர், பிள்ளையார்குளம் என 3 உள்வட்டங்களும், 26 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2] திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் பிரிப்பு

தொகு

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தின் 3 உள்வட்டங்களைக் கொண்டு புதிய வட்டமாக வத்திராயிருப்பு வட்டம் 18 பிப்ரவரி 2019 அன்று நிறுவப்பட்டது.[3]

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 293,209 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 146,005 ஆண்களும், 147,204 பெண்களும் உள்ளனர். 82,678 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 48.9% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 77.1% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,008 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 27,991 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 78,505 மற்றும் 506 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 93.52%, இசுலாமியர்கள் 2.06%, கிறித்தவர்கள் 4.14% மற்றும் பிறர் 0.28% ஆகவுள்ளனர்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "விருதுநகர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்".
  2. "ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்" (PDF).
  3. "Watrap taluk starts administrative functions". The Hindu
  4. "Srivilliputtur Taluka Population, Caste, Religion Data".