கோயம்புத்தூர் மாநகராட்சி

தென்னிந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் (ம) தமிழகத்தில் இரண்டாம் பெரிய மாநகராட்சி
கோயம்புத்தூர் மாநகராட்சி ரயில் நிலையம்
கோவை மாநகராட்சி ரயில் நிலையம்

கோயம்புத்தூர் பெருநகர மாநகராட்சி

இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மேற்குப் பகுதியில் தென்னிந்தியாவின் பெரும் தொழில் நகரமாக (தென்னிந்தியாவின் மான்செஸ்டர்) இருக்கும் கோயம்புத்தூர் மாநகரத்தை ஆட்சி செய்யும் உள்ளாட்சித் துறையின் ஒரு அமைப்பே கோயம்புத்தூர் மாநகராட்சி ஆகும். கோயம்புத்தூர் மாநகராட்சி கிட்டத்தட்ட 148 வார்டுகளை கொண்ட ஓர் பெருநகர மாநகராட்சி ஆகும். கோயம்புத்தூர் மாநகராட்சி சுமார் 105.6 ச.கிமீ பரப்பளவுக்கு விரிந்த மாநகரமாகும்.இது தமிழக பரப்பளவில் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும்.

கோவை மாநகரம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகரமாகும். நெசவு சார்ந்த தொழில்கள், மின் மற்றும் மின் அணு சார்ந்த தொழில்கள், மற்றும் மின்சார நீரேற்றி தயாரித்தல் உள்ளிட்ட பல தொழில்களில் இந்தியாவில் முன்னணி வகிக்கும் மாநகரமாகும். விரைவில் பெருநகராக(cosmopolitan city) வளர்ச்சி அடையும் நிலையில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளதால் இதன் நலம் பயக்கின்ற காலநிலை மிகவும் வரவேற்கக் கூடியதாக ஆண்டு முழுவதும் அமைந்துள்ளது.

சிறப்புகள்தொகு

 • தமிழ்நாட்டில் இரண்டு விமான நிலையங்கள் அமைந்துள்ள பெரிய மாநகரம் இரண்டு மட்டுமே. அது சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகும். கோயம்புத்தூரில் இரண்டு விமான நிலையங்கள் உள்ளன.
 • பன்னாட்டு விமான நிலையம் அவினாசி சாலை வழியாக கோவை மையப்பகுதியான காந்திபுரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் சென்றடையும் விதமாக அமைந்துள்ளது.
 • மலைகளின் இராணி என அழைக்கப்படும் உதகமண்டலம் (ஊட்டி)கோவையிலிருந்து 90 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது சாலைகள் மூலமும் மலைத் தொடர்வண்டியின் மூலமும் கோவையை இணைக்கின்றது.
 • கோவை மாநகரம் இதர மாநிலங்களான கேரளம் மற்றும் கர்நாடகாவை தேசிய நெடுஞ்சாலை 47 மூலம் இணைக்கின்றது.
கோயம்புத்தூர் மாநகராட்சியைப் பற்றியத் தகவல்கள்
பரப்பளவு
105.6 ச. கிமீ
மக்கள் தொகை
2011 கணக்கெடுப்பின்படி 34,58,045
பெருநகர மாநகராட்சி மண்டலங்கள்
கிழக்கு மண்டலம் மேற்கு மண்டலம் தெற்கு மண்டலம் வடக்கு மண்டலம் மத்திய மண்டலம்
மாநகராட்சி வட்டங்கள்
148 வட்டங்கள்
இம்மன்றத்திற்காக அமைக்கபெற்ற நிலைக்குழுக்கள்
வரி மற்றும் நிதிக் குழு
பணிக்குழு
திட்டக் குழு
நல்வாழ்வுக் குழு
கல்விக் குழு
கணக்கிடுதல் குழு

மாநகராட்சி வடிவமைப்புதொகு

மாநகராட்சி மன்றம் நேரிடையையாக தேர்ந்தெடுக்கப்பட்ட 148 உறுப்பினர்களும் மேலும் மேயர் மற்றும் வட்ட நகராட்சி உறுப்பினர்களால் நடத்தப்பெறுகின்றது. தற்பொழுது 25.11.2006 ல் தேர்ந்தெடுக்கப்பட்ட 148 உறுப்பினர்கள், மேயர் மற்றும் துணைமேயர்களால் மன்றம் குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒரு முறை கூட்டப்படுகின்றது. இம்மன்றத்தில் ஆக்கப்பூர்வமான, மாநகருக்குத் தேவையான செயல் திட்டங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன.கோயம்புத்தூர் மாநகராட்சியானது தற்பொழுது 100 வார்டுகளைக் கொண்ட தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய மாநகராட்சி ஆகும். மேலும் இந்த மாநகராட்சியில் நிர்வாக வசதிக்காக

 1. இருகூர்
 2. கண்ணம் பாளையம்
 3. பள்ளப் பாளையம்

ஆகிய மாநகராட்சி எல்லையில் உள்ள பேரூராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் புதிதாக 48 வார்டடுகள் இணையவுள்ளன.இதனால் கோவை பெருநகர மாநகராட்சியில் 148 வார்களை கொண்ட தமிழகத்தில் மிகப்பெரிய மாநகராட்சி என அந்தஸ்தை பெறுகிறது.

பெருநகர கோயம்புத்தூர் மாநகராட்சிதொகு

1871ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.பின் மக்கள் தொகை பெருக்கம், தொழில் நுட்ப வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, மாநகராட்சி பரப்பளவு ஆகியவையால் அ.தி.மு.க 2011ல் ஆட்சி பொறுப்பை ஏற்ற பின் 2013ம் ஆண்டு கோயம்புத்தூர் பெருநகர மாநகராட்சியாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார்.மேலும் தமிழ்நாட்டிலேயே சென்னைக்கு நிகரான பரப்பளவை கொண்ட மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் ஆகும். மேலும் தென்னிந்தியாவிலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் கோவை மாவட்டம் ஆகும்.மேலும் கோவையில் கிடைக்கும் காலநிலை உலகில் வேறு எந்த நாட்டிலும் கிடைக்காது என்பது 100% உண்மை.

பெருநகர கோயம்புத்தூர் மாநகராட்சியின் மண்டலங்கள்தொகு

கோயம்புத்தூர் மாநகராட்சி சுமார் எட்டு மிகப்பெரிய மண்டலங்களை கொண்டுள்ளது.

 • கோவை மேற்கு மண்டலம்
 • சிங்காநல்லூர் மண்டலம்
 • உக்கடம் மண்டலம்
 • சுங்கம் மண்டலம்
 • மத்திய மண்டலம்
 • இருகூர் மண்டலம்
 • வெள்ளலூர் மண்டலம்
 • தொண்டாமுத்தூர் மண்டலம்

என எட்டு பெரு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்திலேயே சென்னைக்கு அடுத்த அதிக மண்டலங்களை கொண்ட பெருநகர மாநகராட்சி இதுவே ஆகும்.

கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் சேவைதொகு

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என புகழப்படும் கோயம்புத்தூர் மாநகரம் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மாநகராட்சி ஆகும். நாளுக்கு நாள் பெருகிவரும் போக்குவரத்து நெரிசல் கோவை மாநகருக்கு ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி மொத்த பரப்பில் வாழும் மக்கள் தொகை சுமார் நாற்பத்து இரண்டு இலட்சங்களுக்கு மேல்.அதாவது 4.5 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இதனை கருத்தில் கொண்டு கோயம்புத்தூர் மாநகரில் மெட்ரோ ரயில் சேவை துவங்க வேண்டும் என கோவை மக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. பின் 2011 ஆண்டிற்கு பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் கோவையில் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்படும் என சட்டசபை தேர்தலில் வாக்குறுதி அளித்தார். பின் அதற்கான பணிகள் நடைபெறவில்லை. அவர் மறைவிற்கு பின் ஆட்சி பொறுப்பை ஏற்ற எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் சட்டசபையில் கோவையில் விரைவில் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீண்ட இழுப்பறிக்கு பின் அதற்கான மண் பரிசோதனை நடைபெற்று வருகின்றன. மேலும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அவை,

 • தடம் 1 சின்னியம்பாளையம் - விமான நிலையம்- கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை - கொடிசியா - டைட்டில் பார்க் - ஹோப்ஸ் - பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி - நவ இந்தியா - லட்சுமி மில்ஸ் - நேரு ஸ்டேடியம் - காந்திபுரம் - கிராஸ்கட் ரோடு - கோவை வடக்கு - வடவள்ளி - தொண்டாமுத்தூர் எனவும்,
 • தடம் 2 காந்திபுரம் - கணபதி - சிவானந்தா காலணி - சாய்பாபா காலணி - ஆர்.எஸ் புரம் - பூ மார்க்கெட் - சுக்ரவார் பேட்டை - நகர் மண்டபம் (டௌண் ஹால்) - ரயில் நிலையம் - காந்திபுரம் எனவும்,
 • தடம் 3 போத்தனூர் - சிங்காநல்லூர் - திருச்சி ரோடு - சுங்கம் - ராமநாதபுரம் - ரேஸ் கோர்ஸ் - ரயில் நிலையம் - உக்கடம் என மூன்று வழித்தடத்தில் இந்த மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட உள்ளது. இதனை கோவை மக்கள் மிகவும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பெருநகர மாநகராட்சிதொகு

 • 1804 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் புதியதாக நிறுவப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக்கப்பட்டது.
 • 1848 ஆம் ஆண்டு நகராட்சி தகுதி வழங்கப்பட்டது. பிரித்தானிய வணிகரும் வள்ளலுமான சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர் முதல் நகராட்சி தலைவரானார். அவரால் 1862 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் கோவை நகரின் முதன்மையான கல்விக்கூடங்களில் ஒன்றாக விளங்குகிறது.
 • 1981 ஆம் ஆண்டு அருகாமையிலிருந்த சிங்காநல்லூர் நகராட்சியை இணைத்து மாநகராட்சியாக உயர்வு பெற்றது.
 • 2013 - ம் ஆண்டு முதலமைச்சர் புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களால் மாநகராட்சியிலிருந்து பெருநகர மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

மாநகராட்சி மக்கள் தொகைதொகு

கொங்கு நாட்டின் தலைநகரம்தொகு

பேருந்து நிலையங்கள்தொகு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகிக்கொண்டை செல்கிறது. இதனால் அரசு அவ்வப்போது திட்டங்களை அறிவித்தாலும் அது போதுமானதாக இல்லை. மேலும் மாநகராட்சி மக்கள் தொகைக்கு ஏற்ப முன்னாள் முதலமைச்சர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சியில் மாநகரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்தார். இந்த மாநகராட்சி பேருந்து திட்டங்களில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி என தமிழகத்தின் பெரு மாநகராட்சிகளில் இயக்கப்பட்டது. இதில் கோவையும் இணைந்தது. மாநகராட்சி பேருந்து நிலையங்கள் ;-

 • காந்திபுரம் நகர பேருந்து நிலையம் - Gandhi Puram Town Bus Stand
 • காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் - Gandhi Puram Central Bus Stand
 • காந்திபுரம் விரைவு பேருந்து நிலையம் - Gandhi Puram S.E.T.C Bus stand
 • காந்திபுரம் கேரள மாநில அரசு பேருந்து நிலையம் - Gandhi puram KERALA SRTC Bus Stand
 • காந்திபுரம் கர்நாடக மாநில அரசு பேருந்து நிலையம் - Gandhi Puram KARNATAKA SRTC Bus Stand
 • காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையம் - Gandhi puram Omni Bus Stand
 • புதிய பேருந்து நிலையம் - New Bus Stand
 • சிங்காநல்லூர் பேருந்து நிலையம் - Singanallur Bus Stand
 • உக்கடம் பேருந்து நிலையம் - Ukkadam Bus Stand
 • வெள்ளலூர் ஜெயலலிதா பேருந்து நிலையம் (ஆசிய, ஐரோப்பிய கண்டங்களிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் இதுவே ஆகும்)- Vellalur Jayalalitha Bus Stand

ஆகிய பேருந்து நிலையங்கள் மாநகராட்சிக்குள் அடங்கும்

பெருநகர வளர்ச்சி குழுமம்தொகு

வெளி இணைப்புக்கள்தொகு