இந்திய சமூக ஜனநாயகக் கட்சி
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ். டி. பி. ஐ) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இது இசுலாமியர், தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக குரல் கொடுத்து வருகிறது.[1]
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ) | |
---|---|
![]() | |
தொடக்கம் | 21 சூன் 2009 |
தலைமையகம் | புது டெல்லி, இந்தியா |
செய்தி ஏடு | புதிய பாதை |
தொழிலாளர் அமைப்பு | SDTU தொழிற்சங்கம் |
கொள்கை | சமூக சனநாயகம் |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 545 |
இணையதளம் | |
http://www.sdpitamilnadu.in http://www.sdpi.in |
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016தொகு
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 இல் திமுக கூட்டணியில் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ) இணைந்து போட்டியிடும் என்று அறிவித்தது.[2].பின்னர் ஏப்ரல் 7 அன்று திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டாமல் கூட்டணியில் இருந்து விலகியது.[3] எஸ்.டி.பி.ஐ கட்சியானது 30 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தமிழ் மாநில தலைவர் தெஹக்லான் பாகவி அறிவித்தார்.[4] 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.
போட்டியிட்ட தொகுதிகள் | வெற்றி பெற்ற தொகுதிகள் | வாக்குகள் | வாக்கு % |
---|---|---|---|
30 | 0 | 65978 | 0.2 % .[5] |
கேரளா சட்டமன்றத் தேர்தல், 2016தொகு
2016 கேரளா சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்து 82 தொகுதிகளில் போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.
போட்டியிட்ட தொகுதிகள் | வெற்றி பெற்ற தொகுதிகள் | வாக்குகள் | வாக்கு % |
---|---|---|---|
82 | 0 | 123243 | 0.6 % .[6] |
மேற்கோள்கள்தொகு
- ↑ [1]
- ↑ "திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ போட்டியிடும்:அக்கட்சியின் தலைவர் தெஹக்லான் பாகவி". தினமணி (20 மார்ச் 2016). பார்த்த நாள் 20மார்ச் 2016.
- ↑ "தொகுதி பங்கீட்டில் அதிருப்தி.. திமுக கூட்டணியில் இருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ கட்சி!". தட்சு தமிழ். பார்த்த நாள் 7 ஏப்ரல் 2016.
- ↑ "25 தொகுதிகளில் தனித்து போட்டி..முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது எஸ்.டி.பி.ஐ". தட்சு தமிழ். பார்த்த நாள் 13 ஏப்ரல் 2016.
- ↑ "GENERAL ELECTION TO LEGISLATIVE ASSEMBLY TRENDS & RESULT 2016". ELECTION COMMISSION OF INDIA (19 மே 2016). பார்த்த நாள் 19 மே 2016.
- ↑ "GENERAL ELECTION TO LEGISLATIVE ASSEMBLY TRENDS & RESULT 2016". ELECTION COMMISSION OF INDIA (19 மே 2016). பார்த்த நாள் 19 மே 2016.